சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் தங்கம் விலை மீண்டும் தாறுமாறாக உயர்ந்து! இப்ப என்ன ரேட் தெரியுமா!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.256 உயர்ந்து 31 ஆயிரத்து 104 ரூபாய்க்கு விற்பனையாகிறது

உலகில் போர், இரு நாடுகளுக்கு இடையே சண்டை, டாலரின் மதிப்பிழப்பு உள்ளிட்ட எந்த பிரச்சனை வந்தாலும் உடனே மக்கள் முதுலீடு செய்வது தங்கத்தில் தான். தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்பது உலகம் முழுவதும் உள்ள மக்களின் நம்பிக்கை.

today gold rate : gold rate hike 256 rupees per savaran

அதனால் தான் எப்போதெல்லாம் அமெரிக்க டாலரின் மதிப்பு சரியும் நிலை உருவாகுமோ அப்போதெல்லாம் தங்கம் விலை தருமாறாக உயரும். அதேபோல் அமெரிக்காவின் பொருளாதாரம், மற்ற உலக நாடுகளின் பொருளாதாரம் நலிவடைந்தால் மக்கள் உடனே தங்கத்தை நாடுவார்கள். அப்படி எல்லோரும் தங்கத்தில் முதலீட்டை திருப்பியதால் கடந்த ஓராண்டில் தங்கம் விலை 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது.

இந்த 4 உணவுகளை சாப்பிடுங்கள்.. கொரோனா வைரஸிலிருந்து தப்பலாம்.. டிக்டாக்கில் மருத்துவர் அஸ்வின் விஜய்இந்த 4 உணவுகளை சாப்பிடுங்கள்.. கொரோனா வைரஸிலிருந்து தப்பலாம்.. டிக்டாக்கில் மருத்துவர் அஸ்வின் விஜய்

இந்நிலையில் கடந்த ஜனவரி 23ம் தேதி ஒரு சவரன் ரூ.30,488க்கு விற்பனையானது தங்கம் விலை. இந்நிலையில் ஒரு சவரன் தங்கம் விலை இந்த ஒரு வாரத்தில் 616 ரூபாய் உயர்ந்திருக்கிறது இன்று ஒரு நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.31104க்கு விற்பனையாகிறது.

சென்னையில் நேற்று 3856க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம், ரூ.32 உயர்ந்து இன்று 3888க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றைக்கு கிராமுக்கு 50 பைசா உயர்ந்து 49.70க்கு விற்கிறது. ஒரு கிலோ ரெடிமேட் வெள்ளி 500 ரூபாய் உயர்ந்து 49700க்கு விற்பனையாகிறது.

English summary
today gold rate : gold rate hike 256 rupees per savaran, Standard Gold 8 grm rs 31104.00
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X