சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் தங்கம் விலை மீண்டும் சரசரவென உயர்வு... ஒரே நாளில் பெரும் உயர்வு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் தங்கம் விலை மீண்டும் விறுவிறுவென உயர்ந்துள்ளது ஒரே நாளில் சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.31,008க்கு விற்பனையாகிறது.

சென்னையில் டிசம்பர் 2வது வாரத்தில் 29 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான தங்கத்தின் விலை இப்போது மீண்டும் 31 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

ஜனவரி 2ம் தேதி ரூ.28,880க்கு விற்பனையான ஒரு பவுன் தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்து ஜனவரி 4, 5ம் தேதிகளில் 30,656க்கு விற்பனையானது.

நாங்கள் செய்யவில்லை.. தப்பிக்க பார்க்கும் ஈரான்.. அமெரிக்க தூதரகத்தை தாக்கியது யார்? தொடரும் மர்மம் நாங்கள் செய்யவில்லை.. தப்பிக்க பார்க்கும் ஈரான்.. அமெரிக்க தூதரகத்தை தாக்கியது யார்? தொடரும் மர்மம்

ஜனவரி 6ல்

ஜனவரி 6ல்

ஜனவரி 6ம் தேதி 31,168க்கு விற்பனையாகி புதிய சாதனை படைத்தது. அதன்பிறகு ஜனவரி 9ம் தேதி நிலவரப்படி சென்னையில் ஒரேடியாக ஒரு சவரனுக்கு 736 ரூபாய் சரிந்து ரூ.30440க்கு விற்பனையானது. அதன்பிறகு பொங்கல் பண்டிகைக்கு பிறகு ஜனவரி 19ம் தேதி முதல் 24ம்தேதி வரை தங்கம் விலை சரசாரியாக 30500 ரூபாய் என்ற அளவிலயே இருந்தது. கொஞ்சம் கூடுவது குறைவது என இருந்தது.

இப்போது அதிரடி உயர்வு

இப்போது அதிரடி உயர்வு

சென்னையில் ஜனவரி 24ம் தேதி 30592 ரூபாய் ஆகஇருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை அடுத்த நாளே அதாவது ஜனவரி 25ம் தேதி 304 ரூபாய் அதிகரித்து ரூ. 30896 ஆக உயர்ந்தது. ஜனவரி 26ம் தேதி நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 ரூபாய் உயர்ந்து ரூ.31,008க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.3872க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை உயர்வு என்பத சாமனிய மக்களை அதிகமாக பாதித்துள்ளது. திருமணத்திற்கு நகை சேர்ப்போருக்கு இந்த விலை உயர்வு பேரிடியாக அமைந்துள்ளது.

1300 ரூபாய் உயர்வு

1300 ரூபாய் உயர்வு

சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராம் 51. 30 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒருகிலோ 51300க்கு விற்பனையானது. முன்னதாக கடந்த ஜனவரி 23ம் தேதியுடன் ஒப்பிடும் போது சில நாளில் மட்டும் ஒரு கிலோ வெள்ளி 1500 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கம் வெள்ளி விலை உயர்வு திடீர் அதிகரிப்பு ஒரு பக்கம் அதிகரித்து இருந்தாலும் கடந்த ஆறு மாதங்களில் தங்கத்தின் இறக்குமதி 6.7 சதவீதம் சரிந்துள்ளது.

அதிரடியாக சரிவு

அதிரடியாக சரிவு

நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் வரை தங்கம் இறக்குமதி 6.7 சதவீதம் சரிந்துள்ளது.பணப்புழக்கம் குறைவு. பொருளாதார மந்தநிலையால் வேலையின்மை போன்ற காரணங்களால் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. தங்கம் இறக்குமதி என்பது ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ரூ.163,300 கோடி அளவுக்கு தான் நடந்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.1,75,583 கோடியாக இருந்தது.

English summary
today gold rate in chennai: today 8 gram gold rs. 31,008, one gram gold rate is rs.3872
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X