சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் தங்கம் விலை மீண்டும் விறுவிறு ... ஒரே நாளில் அதிகரிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் தங்கம் விலை மீண்டும் விறுவிறுவென உயர்ந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்துள்ளது.

சென்னையில் டிசம்பர் 2வது வாரத்தில் 29 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான தங்கத்தின் விலை தை நெருங்கும் நிலையில் ஜனவரி பிறந்த போது 30 ஆயிரத்தை நெருங்கியது.

today gold rate in Chennai: gold rate hike today

ஜனவரி 2ம் தேதி ரூ.28,880க்கு விற்பனையான ஒரு பவுன் தங்கத்தின் விலை அதற்கு மறுநாளே அதாவது ஜனவரி 3ம் தேதி 640 அதிகரித்து, ரூ.30,520க்கு விற்பனையானது. அதன்பிறகு தொடர்ந்து ஏறுமுகம் ஆனது. ஜனவரி 4, 5ம் தேதிகளில் 30,656க்கும் விற்பனையானது.

ஜனவரி 6ம் தேதி 31168க்கும், ஜனவரி 7ம் தேதி சற்று குறைந்து 30904க்கும் விற்பனையானது.

ஜனவரி 8ம் தேதி அன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 31176க்கு விற்பனையாகி புதிய சாதனை படைத்தது. இந்நிலையில் 9ம் தேதி நிலவரப்படி சென்னையில் ஒரேடியாக ஒரு சவரனுக்கு 736 ரூபாய் சரிந்து ரூ.30440க்கு விற்பனையானது.

17 மாடி கட்டடம்.. 163 வீடுகள் தரைமட்டம்.. கொச்சியில் சீட்டுக் கட்டு போல் சரிந்த விதிமீறல் கட்டடம் 17 மாடி கட்டடம்.. 163 வீடுகள் தரைமட்டம்.. கொச்சியில் சீட்டுக் கட்டு போல் சரிந்த விதிமீறல் கட்டடம்

அடுத்த நாளான 109ம் தேதி மேலும் 40 ரூபாய் குறைந்து ரூ.30400 க்கு விற்பனையானது. இந்நிலையில் சனிக்கிழமையான நேற்று ஒரு சவரன் தங்கம்விலை ரூ.160 அதிகரித்து ரூ. 30560 க்கு விற்பனையானது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே ரூ. 30560 க்கே விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 3820க்குவிற்பனையாகிறது

English summary
today gold rate in chennai: today 8 gram gold rs. 30560, one gram gold rate is rs.3820
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X