• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இன்று உலக உணவு தினம்.. உணவை வீணாக்காதீர்கள்! பேராசிரியர்.டாக்டர்.சு.முத்துச் செல்லக் குமார்

Google Oneindia Tamil News

சென்னை: உலக உணவு தினம் என்பது ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பு (United Nations Food and Agriculture Organisation) 1945 இல் நிறுவப்பட்ட தேதியை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16 அன்று கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான உலக உணவு தினத்தின் கருப்பொருள் "ஆரோக்கியமான நாளைக்காக இன்றைய பாதுகாப்பான உணவு" என்பதாகும்.
இந்த நாள், உலகின் பல்வேறு சுவையான உணவுகளைக் குறித்து அறிந்து அவற்றை சாப்பிட மட்டுமில்லாமல்,ஒரு வேளை சாப்பிடவே வாய்ப்பில்லாமல் வறுமையில் இருக்கும் மக்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நாம் மிகவும் முக்கிய நோக்கமாக கொள்ள வேண்டும்.

உணவு மனிதர்களுக்கு மட்டுமல்ல,அவர்கள் வளர்க்கும் விலங்குகளுக்கும், செல்லப் பிராணிகளுக்கும்,அவர்கள் வளர்க்கும் பறவைகளுக்கும், அவர்கள் வளர்க்கும் மீன்களுக்கும் தொடர்ந்து தேவைப்படுகிறது.

உலக அளவில் உணவு வீணாக்கல் தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும்,ஏன் உலக அளவில்,வளர்ந்த,வளரும் நாடுகளிலும் கூட தேவையில்லாமல்அன்றாடம் உணவை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிறுவனமான உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) கூற்றுப்படி,உலக அளவில், முன்றில் ஒரு பங்கு உணவு உற்பத்தி வீணாக்கப்படுகிறது. ஆதாவது,,1.3 பில்லியன் டன் உணவானது வீணடிக்கப்படுகிறது. இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?47 லட்சம் கோடியாகும்!

மாறி வரும் சுற்றுப்புற,கால சூழ்நிலைகளால் வருங்காலங்களில் உணவு பற்றாக்குறை பெருமளவு விஸ்பரூபம் எடுக்குமென உலக பொருளாதார அமைப்பு உலக நாடுகளை எச்சரித்து வருகிறது. உணவை வீணாக்குவதில் உலக அளவில் ரஷ்யா முதலிடத்திலும், இந்தியா 7 வது இடத்தில் இருக்கின்றன.

நமது நாட்டில் உணவு வீணாக்கல் வருடந்தோறும் நமது நாட்டில் மொத்த உணவு உற்பத்தியில்,40% வீணடிக்கப்படுகிறது. உணவை வீணாக்குவதால்,வருடந்தோறும் நமது நாடு சுமார்,58,000 கோடி பணத்தை இழக்கிறது.இந்தியாவில் தினந்தோறும் வீணடிக்கப்படும் உணவின் மதிப்பு சுமார் 244 கோடி என்று ஆய்வுகள் கூறுகின்றன.

நமது நாட்டில் அரிசி முதலான தானியங்களும், பருப்புகளும்,காய்கறி பழங்களும் பெருமளவு வீணடிக்கப்படுகின்றன.
நமது நாட்டில், சாலையின் இருபுறமும்,வீடுகள்வெளியேற்றும் குப்பைகளிலும்,போகுமிடம் எல்லாம் போடப்பட்டிருக்கும் அனைத்திலுமே உணவு பொருட்கள் வீணாக எந்த அளவு உள்ளது என்பதை நாம் அறிவோம்.

உலக நாடுகளின் பட்டினிப் பட்டியல்: பாகிஸ்தானைவிட மோசமான இடத்தில் இந்தியாஉலக நாடுகளின் பட்டினிப் பட்டியல்: பாகிஸ்தானைவிட மோசமான இடத்தில் இந்தியா

 நாம் ஏன் உணவை வீணாக்கக்கூடாது?

நாம் ஏன் உணவை வீணாக்கக்கூடாது?

ஏனென்றால், இந்தியாவில் 190 மில்லியன் மக்கள் உணவும்,ஊட்டச்சத்தும் கிடைக்காத நிலையில் தவிக்கின்றனர். உலகளாவிய பசி அட்டவணையின்படி, நமதுநாட்டில் இப்போது கூட 20 கோடி மக்கள் பசியுடன் வாடிக்கொண்டிருக்கிறார்கள்..

உலகத்தில், உணவு பற்றாக் குறை உடைய மூன்று குழந்தைகள் இருந்தால் அதில் ஒரு குழந்தை இந்தியாவைச் சேர்ந்ததாக இருக்கிறது.
உணவை வீணாக்கி நாம் வறுமையை வளர்ப்பதுடன்,சுற்றுப்புறத்தையும்,நிலத்தையும்,சுகாதாரத்தையும் பாழ்படுத்தி வருகிறோம்.

காடுகள் அழிப்பாலும்,நிலத்தடி நீர் குறைந்து வருவதாலும்,விவசாயம் பல்வேறு சவால்களை எதிர் நோக்கி வருவதாலும்,இயற்கை பேரிடர்களாலும்,அதே வேளை வறுமையாலும்,பசியாலும் நம் மக்கள் பல்வேறு இன்னல்களையும் அனுபவித்து வரும் காலக்கட்டத்தில் உணவை வீணாக்குவது என்பதை ஒரு நாளும் ஏற்றுக்கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ,இயலாது.அதுவும் நமது நாட்டில் இயலவே இயலாது.

எங்கெல்லாம் உணவு வீணாகுகிறது?

எங்கெல்லாம் உணவு வீணாகுகிறது?

விளைவித்த உணவை அறுவடை செய்யும்போது அதனை கொண்டு சேர்க்கும் வழியில் உணவை பதப்படுத்தும் போது உணவை கட்டிக் கொண்டு போகும் போது உணவை நுகர்வோர் அவற்றை சமையலுக்கு பயன்படுத்தும் போதும் என இந்த ஐந்து இடங்களிலுமே உணவை வீணாக்கிக்கொண்டே இருக்கிறோம்.

வீடுகளில்

வீடுகளில்

சமைக்காத உணவையும்,சமைத்த உணவையும்,முறையாக பத்திரப்படுத்தி பாதுகாக்காமல் இருந்தாலோ,அந்த வசதிகள் வீட்டில் இல்லாவிட்டாலோ உணவு கெட்டு போய் வீணாகி விடும்.

கல்யாண வீடுகளில் காணும் காட்சி:

கல்யாண வீடுகளில் காணும் காட்சி:

எத்தனையோ திருமணங்களுக்கு நீங்கள் போய் இருப்பீர்கள் இல்லையா? அங்கு காலையில் பெரும்பாலும் முகூர்த்தம் இருக்கும்.தாலி கட்டியவுடன் புது திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துச் சொல்லி பரிசு கொடுத்தவுடன் சிற்றுண்டிக்குச் செல்வார்கள்.அதே போன்றே மதிய உணவும் தயாராகி இருக்கும். அப்போது தாமதமாக கல்யாணத்திற்கு வந்தவர்கள் மதிய உணவிற்கு செல்வார்கள். திருமண வரவேற்பு என்பது திருமணத்திற்கு ஒரு நாள் முந்தியோ,அல்லது ஒரு நாள் பிந்தியோ நடத்துவார்கள்.

அது பெரும்பாலும் மாலையே நடத்தப்படும். மாலையில் சென்று மணமக்களை வாழ்த்தியவர்கள்இரவு உணவை உண்பார்கள்.இது தான் பெரும்பாலான திருமணங்களின் நடைமுறை.சில திருமணங்கள் அபூர்வமாக இரவு நேரங்களிலும் நடத்தப்படலாம்
திருமணத்திற்கு கண்டிப்பாக வர வேண்டும் என கூறும் உறவினர்களும்,நண்பர்களும்,திருமணத்தில் மணமக்களை வாழ்த்தியவுடன் கூறும் முதல் வார்த்தை கண்டிப்பாக சாப்பிட்டு போங்க என்பது தான்! திருமண விருந்தில் பார்த்தால்,சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இலை போட்டு விடுவார்கள்.அதில் அனைத்து ஐயிட்டங்களையும் வைத்துவிடுவார்கள்(அவர்களுக்கு பிடிக்கிறதோஇல்லையோ )

பலரும் இலையில் வைத்ததில் பாதியைக் கூட முடிக்காமல் மீதம் வைத்துவிடுவார்கள்.தண்ணீர் பாட்டில் விஷயத்திலும் இதே போலத் தான்!கொஞ்சம் குடித்துவிட்டு பாட்டிலை வைத்து போய்விடுவார்கள். இப்படி உணவும்,குடிநீரும் அதிக அளவில் ஒவ்வொரு திருமணத்திலும் வீணடிக்கப்படுவதை கண்கூடாக பார்க்க முடியும்.

திருவிழா/சமூக நிகழ்ச்சிகளில்...

திருவிழா/சமூக நிகழ்ச்சிகளில்...

திருமணம் என்றில்லாமல்,பல்வேறு திருவிழாவின் போது நடத்தப்படும் விருந்துகளிலும்,பிறந்த நாள் தொடங்கி பல்வேறு நண்பர்களும்,உறவினர்களும் கலந்து கொள்ளும் பார்டிகளிலும் சமூக நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து ஏராளமான உணவு தாராளமாக வீணடிக்கப்படுகிறது !

ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா?

ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா?

சமீபத்தில் பெங்களூரு விவசாய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பத்து பேராசிரியர்கள் ஒரு ஆராயச்சியை மேற்கொண்டார்கள். அது என்ன தெரியுமா? பெங்களூரு நகரில் நடந்த 75 திருமணங்களுக்குச் சென்று அங்கு எந்த அளவில் உணவு வீணாக்கப்படுகிறது என்று ஆராய்ந்தார்கள்.இதன் மூலம், சுமார் 943 டன் நல்ல உணவு வீணடிக்கப்பட்டதை கண்டுபிடித்தார்கள்.உண்பதற்கு ஏற்ற இந்த உணவைக் கொண்டு இந்தியாவில் உள்ள 2 கோடியே 60 லட்சம் பேர் பசியாறி இருக்க முடியும் என்ற உண்மையை கண்டுபிடித்தார்கள்.

உணவை வீணாவதை எப்படித் தடுக்கலாம்?

உணவை வீணாவதை எப்படித் தடுக்கலாம்?

உணவு வீணாவதை தடுக்க வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். நகர்புறங்களில் தாங்கள் வாங்கும் உணவுப்பொருட்களில் 20% த்தை வீணாக்குகிறார்கள்.ஆகவே,தேவை இல்லாதவற்றையும், அளவுக்கு மீறி வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். சிறுவர்களுக்கு நல்ல உணவு பழக்கவழக்கங்களுடன் உணவை வீணாக்காமலிருக்கக் கற்று கொடுக்க வேண்டும். மக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். வீட்டிலிருப்பவர்களுக்கு ஏற்ப சமைக்க வேண்டும்.அதிகமாக சமைத்து வீணாக்கவோ,நீண்ட நாட்கள் அதை வைத்து சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

ஒரு வேளை உணவு மீதமாகும் போது அதனை வீணாக்காமல்... மீதமான உணவை கொண்டு உரங்கள் தயாரிக்கவோ, பயோ கேஸ்
தயாரிக்கவோ பயன்படுத்துவதன் மூலம் குறைந்தபட்சம் சுற்றுப்பறத்தை பாதுகாக்க முடியும். மீதமான உணவை புழுக்களுக்கு உணவாக்கலாம்.அது பல உயிரினங்களுக்கு உணவாகும். மீதமான தானியங்களை வளர்க்கும் பறவைகளுக்கும்,கோழிகளுக்கும் உணவாக கொடுக்க முடியும். மீதமான மீன்,இறைச்சி ஆகியவற்றை வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கும்,பிற விலங்கினங்களுக்கும் உணவாக்க முடியும். மீதமான பழங்களை அருகிலிருக்கும் மிருக காட்சி சாலைகளில் இருக்கும் குரங்களுக்கு கொடுத்தால் அவை குடும்பத்தோடு உங்களை கொண்டாடும்.

 உணவு விடுதிகளில்...

உணவு விடுதிகளில்...

பல் வேறு சிற்றூண்டி சாலைகளிலும்,உணவு விடுதிகளிலும் சமைக்க வாங்கும் உணவை அதிகமாக வாங்காமல் போதிய அளவு வாங்கி,அவற்றை முறையாக கெடாமல் பாதுகாத்து,பராமரித்து உணவு வீணாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தின் பணி...

அரசாங்கத்தின் பணி...

அரசாங்கம் உணவு வீணாக்குவதை தவறாக கருதி அதோடு விட்டுவிடாமல்,தண்டனை தருவதற்கு தகுந்ததாக எண்ணி சட்ட திட்டங்களையும்,விதிகளையும் கடுமையாக்க வேண்டும். ஏனெனில் இது ஒரு சமுகக் குற்றம் இல்லையா?

ஏற்கனவே, அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள மெகா ஃபுட் பார்க் திட்டம் எனப்படும் உணவு பூங்கா திட்டம் விவசாயிகளுக்கு உதவுவதுடன் உணவு வீணாவதையும் தடுப்பதால் அதனையும் பாராட்ட வேண்டும். அதே வேளையில், உணவு பதப்படுத்துதல் துறையில் முதலீடு மற்றும் தொழில்நுட்பங்களை புகுத்த நமது அரசாங்கம் மேலும் முனைய வேண்டும்.

தன்னார்வ நிறுவனங்கள்...

தன்னார்வ நிறுவனங்கள்...

உணவு வீணாவதை தடுக்க நமது நாட்டில் பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும் முயன்று வருகின்றன. (Robin Hood Army, Robin Hood Army, GiftAMealInIndia, Let's Spread Love, ) மக்கள் அவர்களோடு ஒத்துழைத்து உதவ முன் வர வேண்டும்.வளர்ந்த நாடுகளோடு நாம் வளர்ச்சியில் தான் போட்டி போட வேண்டும்.உணவை வீணாக்குவதில் அல்ல என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் உணர வேண்டும்.

English summary
World Food Day is celebrated on October 16 each year to commemorate the founding of the United Nations Food and Agriculture Organization in 1945.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X