சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

13 நாளில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்வு.. சென்னையில் இன்று என்ன விலை தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: பெட்ரோல், டீசல் விலை 13வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது, பெட்ரோல் விலை லிட்டருக்கு 56 பைசாவும், டீசல் விலை 63 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் பெட்ரோல் டீசல் விலை குறைவாக இருந்த சமயங்களில் அரசு கலால் வரியை அதிகரித்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் குறையவில்லை. அதேநேரம் தற்போது பெட்ரோல். டீசல் விலை , சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப அதிகரிக்கப்பட்டு வருகிறது.

Today Petrol price hiked by 56 paise/litre, diesel by 63 paise

அந்த வகையில் இந்தியாவில் பெட்ரோல் விலை 13 நாளில் 7.11 ரூபாய் மற்றும் டீசல் விலை 7.67 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு இன்று 46 பைசா உயர்ந்து 81.32 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 53 பைசா உயர்ந்து 77.81க்கு விற்பனையாகிறது. கொல்கத்தாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 51 பைசா உயர்ந்து ரூ.79.59க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 51 பைசா உயர்த்தப்பட்டு 84.66 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

தமிழகத்தில் 2-வது நாளாக 2,000-த்தை தாண்டியது- 2,141 பேருக்கு கொரோனா- மேலும் 49 பேர் மரணம் தமிழகத்தில் 2-வது நாளாக 2,000-த்தை தாண்டியது- 2,141 பேருக்கு கொரோனா- மேலும் 49 பேர் மரணம்

இதேபோல் இந்தியாவின் முக்கியமான நான்கு மெட்ரோ நகரங்களில் டீசல் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை பார்ப்போம். சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு இன்று 54 பைசா உயர்ந்து 74.23 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு 64 பைசா உயர்ந்து 76.43க்கு விற்பனையாகிறது. கொல்கத்தாவில் டீசல் விலை லிட்டருக்கு 56 பைசா உயர்ந்து ரூ.71.96க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் டீசல் விலை லிட்டருக்கு 61 பைசா உயர்த்தப்பட்டு 74.93 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

English summary
Petrol price hiked by 56 paise/litre, diesel by 63 paise; rates go up cumulative by Rs 7.11 and Rs 7.67 respectively in 13 days
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X