சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் திமுக 31 நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்றும்.. டுடேஸ் சாணக்யா கருத்துக்கணிப்பில் தகவல்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Exit polls 2019 | மீண்டும் பாஜக! ஆனால் தமிழகத்தில் திமுக

    சென்னை: டுடே சாணக்யா கருத்து கணிப்பில் தமிழகத்தில் திமுக அதிக இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் கடந்த மாதம் 11ஆம் தேதி தொடங்கிய ஜனநாயக திருவிழா இன்று மாலையுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து எக்ஸிட் போல்கள் வெளியிடப்பட்டன.

    Todays Chanakya exit poll: DMK gets More in Tamilnadu

    டைம்ஸ் நவ், நியூஸ் 18, சிஎன்என் ஐபிஎன், ரிபப்ளிக் சிஓட்டர் உள்ளிட்ட அனைத்து சேனல்களின் கருத்துக்கணிப்பும் பாஜக கூட்டணிக்கு ஆதரவாகவே வந்துள்ளது. இந்நிலையில் டுடே சாணக்யா கருத்துக்கணிப்பும் மாநில வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.

    திமுக கூட்டணிக்கு 21.. அமமுகவிற்கு 5.. அதிமுகவிற்கு 12.. நியூஸ் எக்ஸ் சர்வேயில் ஷாக்! திமுக கூட்டணிக்கு 21.. அமமுகவிற்கு 5.. அதிமுகவிற்கு 12.. நியூஸ் எக்ஸ் சர்வேயில் ஷாக்!

    தமிழகத்தில் வேலூர் தவிர்த்து 38 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.

    இதேபோல் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. டுடே சாணக்யா கருத்துக்கணிப்பின்படி தமிழகத்தில் அதிமுக 6 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திமுக கூட்டணி 31 இடங்களையும் இதர கட்சிகள் ஒரு இடத்தை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 37 இடங்களையும் கைப்பற்றியது. இந்நிலையில் இந்த தேர்தலில் அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Today's Chanakya exit poll: DMK will get 31 seats in Tamil Nadu. AIADMK will get 6 seats in the Parliament election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X