சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

World Photo day : ராகுல் டிராவிட் முதல் தோனி வரை.. வித்தியாசமான ஷாட்டுகளை படம்பிடித்த தர்மசந்துரு!

Google Oneindia Tamil News

சென்னை: டிராவிட் முதல் தோனி வரை நட்சத்திர ஆட்டக்காரர்களின் அத்தனை ஷாட்களையும் அருமையாக படம் பிடித்தவர் தர்ம சந்துரு. இன்று புகைப்பட தினம் என்பதால் இவர் ஆற்றிய பங்களிப்பை பார்ப்போம்.

புகைப்படங்கள், வீடியோ ஆகியவை நாம் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு மகிழ்ச்சிகரமான செயல்களை வருங்காலத்தில் நினைவுப்படுத்தும் ஓர் அற்புதமான கலையாகும். உதாரணமாக பிறந்த குழந்தை தவழ்வது, குப்புற கவிழ்வது, எழுந்து நிற்க முயற்சிப்பது, கால் விரலை வாயில் வைப்பது என அத்தனையும் அழகுதான்.

இதை புகைப்படமாகவோ வீடியோவாகவோ எடுத்துக் கொண்டு அக்குழந்தை பெரிதானவுடன் நாம் காட்டி மகிழும்போது பழைய நினைவுகளை அசைப்போடும்போது மனதிற்கு இதமாகவும் பூரிப்பையும் கொடுக்கும். சுமாரான காட்சிகளையும் சூப்பர் டூப்பராக காட்டுவது ஒரு புகைப்படக் கலைஞரின் பணியாகும். அந்த வகையில் புகைப்படக் கலைஞர் தர்ம சந்துருவின் பணி குறித்து பார்ப்போம்.

கொத்துக்கொத்தாக கொய்யா பழத்துடன் காயத்ரி ஜெயராமன்.. ரசிக்கும் ரசிகர்கள்!கொத்துக்கொத்தாக கொய்யா பழத்துடன் காயத்ரி ஜெயராமன்.. ரசிக்கும் ரசிகர்கள்!

 புகைப்படக் கலைஞர்

புகைப்படக் கலைஞர்

தர்ம சந்துரு கடந்த 24 ஆண்டுகளாக புகைப்படக் கலைஞராக இருந்து வருகிறார். இவர் இதுவரை 20-க்கும் மேற்பட்ட வகைகளில் இவர் புகைப்படத்தை எடுத்துள்ளார். இவர் 2007-ஆம் ஆண்டு எஸ்ஆர்எம் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் புகைப்பட பத்திரிகையாளராக பணியாற்றினார்.

 புகைப்படக் கலைஞராக தேர்வு

புகைப்படக் கலைஞராக தேர்வு

இவர் 2010ஆம் ஆண்டு ராயல் சேலஞ்ஜர்ஸ் அணியின் புகைப்படக் கலைஞராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் இன்கிரிடிபிள் இந்தியா கேம்பைன், என்சான்டிங் தமிழ்நாடு கேம்பைன், ஐசிசி உலக கோப்பை 2011, ஐபிஎல் 2011, ஐபிஎல் 2012, ஐபிஎல் 2014, ஐசிசி டி 20 2016 உலக கோப்பை ஆகியவற்றிலும் இவர் புகைப்படக் கலைஞராக தேர்வு செய்யப்பட்டார்.

 கெனான்

கெனான்

2012-ஆம் ஆண்டு கெனான் புகைப்பட ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இவர் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புகைப்படம் எடுப்பது குறித்து கற்றுக் கொடுத்துள்ளார். அமேசான், அடோபே, பே பால், ஈபே உள்ளிட்ட நிறுவனங்களின் கேம்பைன்களில் புகைப்படம் எடுத்துள்ளார்.

 சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

மேலும் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி, விராட் கோஹ்லி, அனில் கும்ளே உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களின் ஆஸ்தான புகைப்படக்காரராகவும் இருந்துள்ளார். இவர்களில் டிராவிட்டையும் தோனியையும் தமது ஃபேவரைட் என்கிறார். அவர்களது மறக்க முடியாத ஷாட்டுகளை புகைப்படம் எடுத்துள்ளார்.

 ஒரு நாள் போட்டி

ஒரு நாள் போட்டி

அது போல் டெஸ்ட் சீரிஸ், ஒரு நாள் போட்டி, டி20, ஐபிஎல், ஐஎஸ்எல் ஆகிய போட்டிகளில் விளையாடிய எம்எஸ் தோனியின் அனைத்து விதமான புகைப்படங்களை எடுத்துள்ளார். கிரிக்கெட்டை தவிர்த்து இயற்கை மற்றும் நகரங்களில் புகைப்படம் எடுப்பது இவருக்கு மிகவும் பிடிக்கும். புகழ் பெறாத இடங்களை எடுப்பதில் ஆர்வம் அதிகமாம்.

Recommended Video

    IPL-க்கு தயாராகும் RCB.. Kohli வெளியிட்ட புகைப்படம்
    அழுக்கு

    அழுக்கு

    உதாரணமாக பிளாஸ்டிக்குகள் இல்லாத, அழுக்கு இல்லாத நிலப்பரப்புகளையும் இயற்கை காட்சிகளையும் புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும் என்கிறார். கேமரா பிராண்டு பிரதிநிதித்துவத்தின் தொடக்கத்தை 2010 இல் தமிழகத்தில் இவர்தான் முதலில் தொடங்கினார். கேனான் உள்பட 13 பிராண்டுகளின் பிரதிநிதியாக இருந்துள்ளார். இன்று உலக புகைப்படம் தினம்.... இந்த நாளில் தர்ம சந்துருவின் சாதனைகளை நினைவுக்கூர்வதில் பெருமை அடைகிறோம்.

    English summary
    Today is World Photo day. Here are the details of contributions of Dharma chandru a photographer.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X