சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்பாடா.. சொல்லீட்டாங்கப்பா.. நாளை சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு.. கனமழையால் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இடைவிடாது கனமழை பெய்து வருவதன் காரணமாக நாளை சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக விடுமுறையை மறுத்த அவர் பின்னர் விடுமுறை அறிவிப்பினை முறைப்படி வெளியிட்டார்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு , விழுப்புரம், கடலூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையான இன்று பல்வேறு பகுதிகளில் இடைவிடாது அதீத கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன.

tomorrow no holiday for schools in chennai district

சென்னை மாநகரில் நேற்று இரவு தொடஙகி இன்று காலை வரை மழை பெய்த நிலையில் , இன்று மாலையும் நல்ல மழை பெய்தது.இப்போது பல இடங்களி மழை விட்டு விட்டு கொட்டி வருகிறது.

இந்நிலையில் சென்னை மாவட்டத்திற்கு கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை முதலில் மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி மறுத்துள்ளார். சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை இல்லை என்றும் வழக்கம் போல் செயல்படும் என்றும் அவர் கூறினார்.

இதையடுத்து சிறிது நேரத்தில் சென்னை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இடைவிடாமல் வெளுக்கும் மழை.. 8 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறைதமிழகத்தில் இடைவிடாமல் வெளுக்கும் மழை.. 8 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

English summary
chennai schools no holiday on tomorrow: district collector seethalakshmir refused
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X