• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தக்காளியுடன் போட்டி போடும் முருங்கைக்காய் - சதமடித்த வெண்டை, கத்தரியால் இல்லத்தரசிகள் கவலை

Google Oneindia Tamil News

சென்னை: தொடர்மழையால் காய்கறிகள், தக்காளி விளைச்சல் குறைந்து சந்தைக்கு வரத்து குறைவாக உள்ளது. தமிழகம் முழுவதும் தக்காளி விலை ஒரு கிலோ 130 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. தாக்களியுடன் போட்டி போட்டுக்கொண்டு முருங்கைக்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய் என பல காய்கறிகளும் 100 ரூபாய்க்கு மேல் விலை உயர்ந்துள்ளதால் வீட்டு பட்ஜெட்டில் அதிக அளவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.

சென்னை, கோவை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், திருப்பூர், ஈரோடு, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் தக்காளி, காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. கனமழையாலும், ஒரு கிலோ 110 முதல் 130 வரை விற்கப்படுகிறது. சில்லறை விற்பனையில் 140 ரூபாய்க்கு தக்காளி விற்கப்படுகிறது.

ஆந்திராவிலேயே இந்த நிலையா? பெட்ரோல், தக்காளி இரண்டும் ஒரே விலைதான்.. கலங்கும் மக்கள்! ஆந்திராவிலேயே இந்த நிலையா? பெட்ரோல், தக்காளி இரண்டும் ஒரே விலைதான்.. கலங்கும் மக்கள்!

 Tomoto Vegetalbles Price Today : Drumsticks competing with tomatoes cost Rs 130 per kg

கடந்த இரு வாரங்களாக தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பெய்த கனமழையால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து, அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடுமையான மழை பொழிவால் கீரைகள் விளைநிலங்களிலேயே அழுகிவிட்டன. அரைகீரை,சிறுகீரை, முளை கீரை, தண்டு கீரை, மற்றும் மணத்தக்காளி,கரிசலாங்கண்ணி கீரை, உள்ளிட்ட மருத்துவ குணங்கள் நிறைந்த கீரை வகைகளின் வருகை இல்லை. பசலை கீரை,பாலக்கீரை, பொன்னாங்கன்னிகீரை, முருங்கைக் கீரை வெங்காய தாள், மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கட்டு கீரை 15 முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 Tomoto Vegetalbles Price Today : Drumsticks competing with tomatoes cost Rs 130 per kg

இன்றைய காய்கறிகள் விலை நிலவரம் - ஒரு கிலோ

 • பல்லாரி வெங்காயம் ரூ. 40
 • சின்ன வெங்காயம் ரூ. 80
 • நவீன் தக்காளி ரூ. 140
 • நாட்டு தக்காளி ரூ.130
 • உருளை ரூ. 40
 • ஊட்டி கேரட் ரூ.65
 • பெங்களூர் கேரட் ரூ. 50
 • பீன்ஸ் ரூ. 90
 • பீட்ரூட் ரூ. 60
 • கர்நாடக பீட்ரூட் ரூ. 50
 • சவ் சவ் ரூ.20
 • முள்ளங்கி ரூ. 50
 • முட்டை கோஸ் ரூ.40
 • வெண்டைக்காய் ரூ.100
 • உஜாலா கத்திரிக்காய் ரூ.100
 • வரி கத்திரி ரூ. 40
 • காராமணி 60
 • பாவக்காய் ரூ.40
 • புடலங்காய் ரூ. 50
 • சுரக்காய் ரூ. 30
 • சேனைக்கிழங்கு ரூ. 20
 • முருங்கைக்காய் ரூ. 130
 • சேம கிழங்கு ரூ. 25
 • காலிபிளவர் ரூ. 30
 • வெள்ளரிக்காய் ரூ. 20
 • பச்சை மிளகாய் ரூ.30
 • அவரைக்காய் ரூ.80
 • மஞ்சள் பூசணி 10
 • வெள்ளை பூசணி.10
 • பீர்க்கங்காய் ரூ.35
 • எலுமிச்சை 50
 • நூக்கல் 50
 • கோவைக்காய் ரூ.40
 • கொத்தவரங்காய் 40
 • வாழைக்காய் 1 காய் ரூ. 10
 • வாழைப்பூ ரூ. 20
 • பச்சைகுடமிளகாய் ரூ. 70
 • வண்ண குடமிளகாய் ரூ. 190
 • பட்டாணி ரூ. 90
 • இஞ்சி ரூ.45
 • பூண்டு ரூ.130
 • கொத்தமல்லி ஒரு கட்டு ரூ. 12
 • புதினா ரூ. 6
 • கருவேப்பிலை ரூ. 30
 • தேங்காய் - ஒரு காய் 20
 • சௌ சௌ ரூ.20
 Tomoto Vegetalbles Price Today : Drumsticks competing with tomatoes cost Rs 130 per kg

தக்காளி, காய்கறிகளின் விலை அதிகரிப்பினால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். இதனிடையே நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் உள்ளிட்ட 65 பண்ணைப் பசுமைக் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படுமென கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ தக்காளி ரூ. 79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை, கோவை, தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சை, நெல்லை, திருப்பூர், ஈரோடு, சேலம், வேலூரில் இவை விற்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக, நாள் ஒன்றுக்கு 14 டன் தக்காளி கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

தொடர் மழை காரணமாக செடிகளில் காய் பிடிப்பது குறைந்துள்ளது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்து, விலை உயர்ந்துள்ளது. பருவ மழை முடிந்த பிறகே காய்கறிகள் வரத்து அதிகரித்து, அவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

  உயரும் காய்கறி விலை.. | Vegetable Price In Chennai | Oneindia Tamil

  மழை காலங்களில் டெங்கு உள்ளிட்ட நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க நிறைய காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். காய்கறிகள் இந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் எப்படி வாங்கி சாப்பிடுவது என்று கவலைப்படுகின்றனர் இல்லத்தரசிகள்.

  English summary
  Due to the continuous rains, the yield of vegetables and tomatoes is less and the supply to the market is less. Tomatoes sell for over Rs. 130 per kg throughout Tamil Nadu. Farmers are worried that the housing budget will be severely deficient as prices of many vegetables such as onions, aubergines and lentils have gone up to compete with the plague.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X