சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3 ப்ளான்கள்.. 3 லீடர்கள்.. "தோட்டம்" ரெடியாகுதாமே.. எடப்பாடி + ஓபிஎஸ் + சசி.. டைமும் நெருங்கிடுச்சே

அதிமுகவின் பொன்விழாவை தலைவர்கள் எப்படி கொண்டாட போகிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கட்சியின் பொன்விழாவை எப்படி கொண்டாட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன், 3 தலைவர்களின் மாஸ் பிளான் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.

அரசியல் கட்சியின் உட்பிரச்சனைகளை, ஒரு நீதிமன்றம் தீர்த்து வைப்பது என்பது அந்த அளவுக்கு சுலபமில்லை.. அரசியல் கட்சி பிரச்சனைகளுக்கான தீர்வை, அரசியல் கட்சிக்குள்ளேதான் தேட முடியும் என்பதே உண்மை.

எனினும் சட்டரீதியான போராட்டங்களை ஓபிஎஸ் + எடப்பாடி இரு தரப்புமே எடுத்து வருவதால், அங்கு வரும் தீர்ப்பு மட்டுமே எடப்பாடி & ஓபிஎஸ் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடியதாக உள்ளது.

அதிமுக எம்எல்ஏக்கள்,மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிச்சாமி..அனல் பறக்குமா? அதிமுக எம்எல்ஏக்கள்,மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிச்சாமி..அனல் பறக்குமா?

 3 புள்ளிகள்

3 புள்ளிகள்

இந்நிலையில், கட்சியின் பொன்விழாவை கொண்டாட அதிமுக திட்டமிட்டு வருகிறது.. வருகிற 17ம் தேதி அதிமுக பொன்விழா நிறைவு விழாவை விமர்சியாக கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.. எனவே, தங்களின் வலிமையை மற்றவர்களுக்கு நிரூபிக்கவும் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலா மூவரும், மூன்று ரூட்டுகளில் திட்டமிட்டுள்ளனராம்.. சென்னை அடையாறு பகுதியில் உள்ள எம்ஜிஆர்-ஜானகி அம்மாள் கல்லூரி வளாகத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களை திரட்டி கொண்டாட எடப்பாடி திட்டமிட்டிருக்கிறார். இந்த கல்லூரி எம்ஜிஆரின் குடும்பத்தினரான லதாராஜேந்திரன் வசம் உள்ளது..

 கல்சுரல் + அரசாணை

கல்சுரல் + அரசாணை

இவரது மகன் குமார் ராஜேந்திரனின் நிர்வாகத்தில்தான் தற்போது இந்த கல்லூரி இருக்கிறது... ஆனால், குமார் ராஜேந்திரன் இப்போதைக்கு சசிகலா அணியில் இருக்கிறார்.. அதனால், எடப்பாடி பழனிசாமியின் திட்டத்திற்கு இவர் அனுமதிப்பது சந்தேகம் என்கிறார்கள்... அதுமட்டுமல்ல, பள்ளி கல்லூரி வளாகத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சி ஆகியவை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று அரசாணையே இருக்கிறது.. எனவே, இந்த விஷயம் எடப்பாடிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதால், அடுத்து என்ன செய்யலாம்? பிரம்மாண்டமாக எங்கு நடத்தலாம்? என்று ஆலோசிக்க ஆரம்பித்து விட்டாராம் எடப்பாடி.

 ராமாவரம் தோட்டம்

ராமாவரம் தோட்டம்

அடுத்து சசிகலாவும், அதிமுக பொன்விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். சென்னை ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்ல வளாகத்தில் இருக்கும் பள்ளி ஆடிட்டோரியத்தில் கொண்டாட முடிவு செய்திருக்கிறார். இதற்காக தனது ஆதரவாளர்களை அணுப்பி, குமார் ராஜேந்திரனிடம் ஆலோசிக்க சொல்லியிருக்கிறார் சசிகலா. குமார் ராஜேந்திரனோ, பள்ளியில் நடத்தக் கூடாது... என்ற அதே அரசாணை குறித்து தெரிவித்திருக்கிறார். இதைக் கேட்டு சசிகலா மூட்அவுட் ஆகிவிட்டாராம்.. இருப்பினும் எம்ஜிஆர் தோட்டத்தில் தான் நடத்த வேண்டும் என்று அடம் பிடிக்கிறாராம்.. இதனால், பள்ளிக்கூடத்திற்குள் நடத்தாமல், எம்ஜிஆர் சிலை இருக்கும் வளாகத்தில் மேடை அமைத்து கொண்டாட முடியுமா? என்று தற்போது விவாதித்தபடி இருக்கிறார்களாம்.

பண்ருட்டியார்

பண்ருட்டியார்

அடுத்து ஓபிஎஸ்... இவர் சென்னை தி.நகரில் இருக்கும் எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக கொடியேற்றி கொண்டாட முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை ஜேசிடி பிரபாகரிடம் கொடுத்துள்ளார் ஓபிஎஸ்.. இந்த விழாவில், பண்ருட்டி ராமச்சந்திரன் கலந்துகொள்கிறார். ஆக, பொன்விழாவை கொண்டாட 3 பேரும் துடிக்கிறார்களோ இல்லையோ, இந்த விழாவின் மூலம் மூவரும் தங்களின் வலிமையைக் காட்ட பொன்விழாவை பயன்படுத்த துடிப்பதாக தெரிகிறது.. அதற்காகவே இந்த மூவருமே, எம்ஜிஆர் தொடர்புடைய இடங்களை தேர்வு செய்து நிகழ்ச்சியை கொண்டாட நினைக்கின்றார்களாம்..!!!

English summary
Top Ideas of 3 Leaders and How is AIADMK going to celebrate the party's golden jubilee
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X