சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டாப் டிரெண்டாகும் #StopHydroCarbon.. நேசமணியை விட்டு விட்டு வாழ்வாதாரத்தை கையில் எடுத்த தமிழர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: விறகுகள் எரியலாம் விளை நிலங்கள் எரியக்கூடாது என்று கூறி டுவிட்டரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் பலர் திடீரென கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். கடந்த வாரம் நேசமணிக்காக குரல் கொடுத்த மக்கள் இப்போது காவிரி டெல்டா மக்களுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன்ஆய்வு நடந்து வருகிறது. இதற்காக விளைநிலங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து எண்ணைய் எடுத்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

top trending twitter hashtags in Chennai, tn people trend Stop Hydro Carbon

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்கும் முன்பே, புதிதாக விழுப்பரம், கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் 42 இடங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு நடத்த அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான அனுமதியை வேதாந்தா நிறுவனம், ஓஎன்ஜிசி நிறுவனம் மற்றும் அதானி நிறுவனம் பெற்றுள்ளன.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அண்மைக் காலமாக டுவிட்டரில் ஏதேனும் ஒன்றை டிரெண்ட் செய்து எதிர்ப்புகளை காட்டி வரும் தமிழக மக்கள் பிரதமர் மோடி பதவியேற்பு அன்று நேசமணிக்காக பிரே பண்ணுங்க என்று குரல் கொடுத்து உலக அளவில் டிரெண்ட் செய்தனர்.

அதன்பின்னர் இந்தி எதிர்ப்பு எதிராக டுவிட்டரில் குரல் கொடுத்த தமிழக மக்கள் உலக அளவில் நம்பர் ஒன் டிரெண்டிங்காக இந்தி எதிர்ப்பை காட்டினர்.

இப்போது தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் வேண்டாம் என்றும் விறகுகள் எரியலாம் விளை நிலங்கள் எரியக்கூடாது என்றும் கூறி ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக காலையில் இருந்து டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் நில வளம், நிலத்தடி நீர் வளத்தை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்தத் திட்டத்தையும் நாம் அனுமதிக்க கூடாது என்று குரல் எழுப்பி வருகிறார்கள்.

English summary
top trending twitter hashtags in chennai, tn people trand Stop HydroCarbon after nesamani and hindi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X