சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ப்பா.. 42 நாளில் 55% அதிகம் பெஞ்சிருக்கு.. இதுதான் பெஸ்ட் பருவமழை.. தமிழகத்தை புரட்டி எடுத்த வானிலை!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இந்த வருடம் தென்மேற்கு பருவமழை 55% அதிகம் பெய்து இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. முதலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பெரிய அளவில் தமிழகத்தில் மழை இல்லை. ஆனால் இரண்டாவது உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது.

இதனால் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் என்று தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்தது. அதேபோல் தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தீவிரமாக மழை பெய்து வந்தது.

இனிமே எதிர்பார்க்க முடியாது.. தமிழகத்தில் திடீரென்று மாறிய வானிலை.. வெதர் ரிப்போர்ட் சொல்வது என்ன? இனிமே எதிர்பார்க்க முடியாது.. தமிழகத்தில் திடீரென்று மாறிய வானிலை.. வெதர் ரிப்போர்ட் சொல்வது என்ன?

தென்மேற்கு பருவமழை

தென்மேற்கு பருவமழை

தமிழகத்தை தென்மேற்கு பருவமழை புரட்டி எடுத்துள்ள நிலையில் இது தொடர்பாக வெளியாகி இருக்கும் டேட்டாக்கள் இன்னும் சந்தோசம் அளிக்கிறது. அதன்படி தமிழகத்தில் இந்த வருடம் தென்மேற்கு பருவமழை 55% அதிகம் பெய்து இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் இதுவரை 242.8 மி மீ மழை பெய்துள்ளது.

சிறந்த சீசன்

சிறந்த சீசன்

ஜூன் 1 முதல் நேற்று வரை.. இதுதான் சிறந்த பருவமழை சீசன்களில் ஒன்றாகும். பொதுவாக முதல் 42 நாட்களில் 150 - 160 மிமீ மழை பெய்யும்.கடந்த வருடம் கூட தமிழகத்தில் 156.5 மிமீ மழை பெய்தது. ஆனால் இந்த முறை அதை விட கூடுதலாக 90 மிமீ மழை பெய்துள்ளது.

எங்கு

எங்கு

அதேபோல் இந்த முறை கோவை மாவட்டம், நீலகிரி மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது. நீலகிரியில் இருக்கும் தோவாலா மாவட்டத்தில் மட்டும் 40 மிமீ மழை பெய்து இருக்கிறது. அதேபோல் கோவையில் இருக்கும் இருக்கும் சின்னக்கல்லாறு பகுதியில் 40 மிமீ மழை பெய்தது. நீலகிரி அவலஞ்சியில் 20 மிமீ மழை பெய்துள்ளது.

அணைகள் எப்படி

அணைகள் எப்படி

இதன் காரணமாக தமிழகத்தில் குளங்கள், ஏரிகள் நிரம்பி உள்ளது. சென்னையில் தண்ணீர் பிரச்சனை தீர்ந்துள்ளது. அதோடு கர்நாடகாவில் இன்னும் மழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் வரும் நாட்களில் கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்படும். ஆகவே கண்டிப்பாக இந்த முறை கடைமடைக்கு தண்ணீர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாதனை

சாதனை

இன்னொரு பக்கம் பாம்பன் - மண்டபம் பகுதியில் கடந்த வாரம் சனிக்கிழமை சில மணி நேரத்தில் 121.88 மிமீ மழை பாம்பன் பகுதியில் பெய்துள்ளது. பாம்பன் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த 121.88 மிமீ மழை இதற்கு முன் ஒரே நாளில் பெய்த 73.9 மிமீ மழையை முறியடித்து உள்ளது. 100 வருடங்களுக்கு முன் பதிவான இந்த ஒரு மாத ரெக்கார்ட்டை சில மணி நேரத்தில் பாம்பன் மழை முறியடித்து உள்ளது.

Recommended Video

    அடுத்தடுத்து ஏற்படும் புயல், நிலநடுக்கம்.. என்ன காரணம்?

    English summary
    Totally 50% more rain then usual monsoon poured in Tamilnadu in last 42 days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X