சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குஷியில் "ஏசி".. தீவிரத்தில் கதிரானந்த்.. தகிக்க போகும் வேலூர் தொகுதி

வேலூர் தொகுதி வேட்பாளர்கள் மும்முரமான பணியில் இறங்கிவிட்டனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    Vellore Constitution : குஷியில் 'ஏசி சண்முகம்! தீவிரத்தில் கதிரானந்த்: வேலூர் தொகுதி நிலவரம்- வீடியோ

    சென்னை: வேலூர் தொகுதியில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் அது மத்திய அரசில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த போவதில்லை என்றாலும், அதிமுக, திமுக கட்சிகளுக்கு இந்த வெற்றி மிக முக்கியமானதாக உள்ளது.

    வேலூர் தொகுதியில் ஏசி சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் மீண்டும் போட்டியிடுவார் என்று அதிமுக தலைமை அறிவித்துவிட்டது. அதேபோல, வேலூர் தொகுதியில் தோழமை கட்சிகளின் ஆதரவு பெற்ற திமுக வேட்பாளராக கதிர்ஆனந்த் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டு விட்டது.

    அறிவிப்பு வெளியாகி இரண்டு நாள் கூட ஆகவில்லை. ஏசிஎஸ்-ம், துரைமுருகனும் கோதாவில் இறங்கிவிட்டனர். "எங்களால் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் நின்றுபோனது என்று கூறுவது சரியல்ல. எங்கள் மீது எந்த தவறும் இல்லை.

    நள்ளிரவில் திடீர் நெஞ்சு வலி.. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் முகிலன் அனுமதி

    துரைமுருகன்

    துரைமுருகன்

    எங்கள் வீட்டிலும், கல்லூரியிலும் சோதனையிட்டு எதுவும் பிடிபடவில்லை என்று வருமான வரித்துறையினர் எழுதி கொடுத்து சென்றனர். எங்களுக்கும், வருமான வரித்துறையினருக்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை" என்று துரைமுருகன் இத்தனை நாள் இல்லாமல் நேற்று தெரிவித்துள்ளார். "வேலூரில் தேர்தல் எதற்காக நிறுத்தப்பட்டது? தற்போது திமுக சார்பில் யார் போட்டியிடுகிறார்? என்பதை மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிப்பார்கள்" என்று ஏசிஎஸ் இதற்கு உடனடியாக பதிலடி தந்துள்ளார்.

    மைனஸ்

    மைனஸ்

    விட்டதை பிடித்துவிட வேண்டும் என்று தீவிரத்தில் இருக்கிறார்கள் இரு வேட்பாளர்களுமே. துரைமுருகனின் செல்வாக்கு, அரசியல் பலம், பண பலம், வன்னியர் ஓட்டுக்கள் என்று ஒரு பக்கம் இருந்தாலும், தொகுதியில் தேர்தல் நின்றுபோகும் அளவுக்கு "தோண்ட, தோண்ட" என்பதை தொகுதி மக்கள் நேரிடையாக பார்த்தது பெரிய மைனசாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    வாக்குகள்

    வாக்குகள்

    புதிய நீதி கட்சி ஏசி சண்முகம். முதலியார் சமூகத்தை சேர்ந்தவர். இவருக்கென்று பெரிய செல்வாக்கு இல்லாவிட்டாலும் வேலூரில் கணிசமான முதலியார் சமூக வாக்குகள் உள்ளன. இதைதவிர, போன முறையை விட இந்த முறை ஏசி சண்முகம் கொஞ்சம் தெம்பாகவே இருக்கிறாராம்.

    மறைமுக ஆதரவு

    மறைமுக ஆதரவு

    இதற்கு முதல் காரணம் கூட்டணி கட்சிகளின் ஆட்சி மத்தியிலும், மாநிலத்திலும் அமைந்துள்ளது. இரண்டாவதாக, ரஜினியின் மறைமுக ஆதரவு உள்ளதாக சொல்லப்படுகிறது. அதிமுக, பாஜக பக்கபலமாக எல்லாவிதத்திலும் துணை நிற்கும் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது. இது எல்லாவற்றையும்விட ஏற்கனவே வாரி இறைத்தது எந்த விதத்திலும் வீண் போகாது என்ற எண்ணமும் நிறைந்துள்ளது. இனியும் தாராளங்கள் அதிகமாகவே காட்டப்படும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இதெல்லாம்தான் ஏசி சண்முகம் குஷியாகி உள்ளதற்கு காரணம்.

    மறைமுக ஆதரவு

    மறைமுக ஆதரவு

    ஏற்கனவே அபார வெற்றி பெற்ற திமுக, இந்த முறையும் வேலூர் தொகுதியில் வெற்றி பெறுவதில் மும்முரம் காட்ட தொடங்கி உள்ளது. அதேபோல, இரட்டை இலை சின்னத்தில் ஏசிஎஸ் நிறுத்தப்படுவதால் அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் முழு வீச்சில் இறங்கி அவரை வெற்றி பெற வைக்க போராடும் என தெரிகிறது.

    ஸ்டார் தொகுதி

    ஸ்டார் தொகுதி

    இதில் திமுக வெற்றி பெற்றால், எம்பிக்களின் எண்ணிக்கை 38 ஆக உயரும், அதிமுக வெற்றி பெற்றால் எம்பிக்களின் எண்ணிக்கை 2 ஆக உயரும். அதனால் இந்த எண்ணிக்கையை உயர்த்த ஸ்டார் தொகுதியான வேலூர் தொகுதி இனி ஒவ்வொரு நாளும் பரபரக்க போகிறது என்பது நிச்சயம்!

    English summary
    There is tough competition between ADMK Candidate AC Shanmugam and DMK Candidate Kadhir Anand in Vellore Constitution
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X