சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக பாஜக தலைவராகிறாரா வானதி .. ரேஸில் மதுரை சீனிவாசனும்.. கருப்பு முருகானந்தனும்!

தமிழக பாஜக தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்க வாய்ப்பு என கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: தமிழிசை சவுந்தராஜனின் பதவிக்காலம் முடிய போவதால், அடுத்த தமிழக பாஜக தலைவர் யார் என்பதில் இப்போதே கடும் போட்டா போட்டி நடக்கிறது.

தற்போதையை தமிழக தலைவராக உள்ள தமிழிசைசவுந்தர் ராஜனின் பதவிக் காலம் முடியப்போகிறது. இவர் இரண்டு முறை தமிழக பாஜக தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.

கடந்த 2014ல், மாநில தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அதனால் அந்த பதவி தமிழிசைக்கு தரப்பட்டது. ஆனால் பதவிக்காலம் முழுசாக வகிக்காததால், திரும்பவும், தமிழக பாஜக தலைமை பதவி தமிழிசைக்கே வந்து சேர்ந்தது.

இப்படி குளித்து.. பல் துலக்கி.. துணி துவையுங்க.. தண்ணீர் பிரச்சினையை விரட்டிவிடலாம்.. சீமான் டிப்ஸ் இப்படி குளித்து.. பல் துலக்கி.. துணி துவையுங்க.. தண்ணீர் பிரச்சினையை விரட்டிவிடலாம்.. சீமான் டிப்ஸ்

பூஜைகள்

பூஜைகள்

முடிந்தவரை தனது பதவிக்கு விசுவாசமாக நடந்து கொண்டவர்.. எந்த இடத்திலேயும் பாஜக கொள்கைகளையும் விட்டுத்தராதவர். பிரதமர் மோடி பிரதமராக வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் சிறப்பு பூஜைகளை செய்தவர். தமிழக மக்களின் பல அதிருப்திகள், எதிர்க்கட்சிகளின் கண்டன பேச்சுகள், ஒருசிலரின் கீழ்த்தரமான விமர்சனங்களுக்கு நடுவில்தான் தனது நாகரீக அரசியலை முன்னெடுத்து வருபவர்.

கோஷம்

கோஷம்

இப்போது இவரது பதவிக்காலம் முடிய போகிறது. அதுவும் இல்லாமல், தூத்துக்குடியில் தோல்வி, மகன் ஏர்போர்ட்டில் எழுப்பிய விவகாரம், அதற்கு தமிழிசை அளித்த விளக்கம்.. இதெல்லாம் சேர்ந்து பாஜக தலைமைக்கும் தமிழிசை மீது அதிருப்தி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

மதுரை சீனிவாசன்

மதுரை சீனிவாசன்

அதனால் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற கேள்வியும், பரபரப்பும் எழுந்துள்ளது. இதற்கு நிறைய பேர் ரேஸில் உள்ளனர். குறிப்பாக மாநில செயலாளர் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், மதுரை பேராசிரியர் சீனிவாசன் பெயர்கள் பட்டியலில் உள்ளன.

தலைவர் பதவி

தலைவர் பதவி

இதில் கருப்பு முருகானந்தம் பொன்.ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர். பொன். ராதா மீது பாஜக தலைமை எப்போதுமே ஒரு நல்ல மதிப்பை வைத்திருக்கும். இதன்காரணமாக முருகானந்தத்துக்கு தலைவர் பதவி தரப்பட பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம்.

தலைவர் மாற்றம்?

தலைவர் மாற்றம்?

அதேபோல, சில நாட்களுக்கு முன்பு தலைவர் பதவிக்கு வானதி பெயரும் அடிபட்டது. அப்போது இதைபற்றி கேட்டதற்கு, "தேர்தலுக்காக தலைவர் பதவி மாற்றப்படவில்லை. ஒரு தலைவர் இரண்டு முறைக்கு மேல் இருக்க முடியாது. இது கட்சியின் அமைப்பு ரீதியான முடிவாகும். தேர்தலுக்காக தலைவர் மாற்றம் இருக்காது. யார் தலைவர் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும் என்றார்.

சிபி ராதாகிருஷ்ணன்

சிபி ராதாகிருஷ்ணன்

இருந்தாலும் வானதி சீனிவாசனுக்கும் நிறைய வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. இவர் எம்பி தொகுதியில் கோவையில் நிற்க சீட் கேட்டிருந்தார். ஆனால் சிபி ராதாவுக்கு தரப்பட்டுவிட்ட, வருத்தத்தில் இருந்தார். ஒருவேளை இதனை சரிக்கட்ட பாஜக தலைமை புதிய பதவியை தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

English summary
Sources says Vanathi Srinivasan is said to be the choice for Tamilnadu BJP Leader
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X