சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவுக்காக இறங்கி அடிக்கும் பாமக.. கலக்கத்தில் திமுக.. ஸ்ரீபெரும்புதூரில் கரை ஏறுவாரா டிஆர் பாலு

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பாமக-திமுக நேருக்கு நேர் மோதுவதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்ரீபெரும்புதூரில் அதிமுகவுக்காக இறங்கி அடிக்கும் பாமக- வீடியோ

    சென்னை: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அதிமுக கூட்டணிக்கு அதாவது பாமக பக்கமே வெற்றியின் வாடை அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது!

    திமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர். பாலு களம் இறக்கப்பட்டுள்ளார். இந்தத் தொகுதியின் முன்னாள் எம்பியான டி.ஆர்.பாலு கடந்த தேர்தலில் தோல்வியைச் சந்தித்தவர்.

    கட்சியின் மூத்த தலைவர்தான், கருணாநிதிக்கு நெருக்கமானவர்தான், அரசியல் அனுபவத்தை கரைத்து குடித்தவர்தான், அறிமுகமோ, வரலாறோ, விளக்கமோ டி.ஆர்.பாலுக்கு தேவையில்லைதான்.

    தடதடக்கும் தேனி.. கடும் போட்டியில் 3 வேட்பாளர்கள்.. வெல்ல போவது யாரு?தடதடக்கும் தேனி.. கடும் போட்டியில் 3 வேட்பாளர்கள்.. வெல்ல போவது யாரு?

    தோல்வி

    தோல்வி

    டி.ஆர்.பாலு முன்பு தென் சென்னையில்தான் போட்டியிட்டு வந்தார். பிறகு தொகுதி மறு சீரமைப்பில் தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர் உள்ளிட்ட தென் சென்னை தொகுதிகள் ஸ்ரீபெரும்புதூருக்குப் போய் விட்டதால் டி.ஆர்.பாலுவும் 2009ம் ஆண்டு தேர்தலில் இந்தத் தொகுதிக்கு மாறினார். வெற்றி பெற்றார். கடந்த முறை தோல்வியைத் தழுவினார்.

    அன்பரசன்

    அன்பரசன்

    இவர் தேவர் சமூகத்தை சேர்ந்தவர். இந்த தொகுதியிலோ வன்னியர் சமுதாய மக்கள் அதிகம். திமுக மாவட்ட செயலாளர் அன்பரசனுக்கும், இவருக்கும் ஏழாம் பொருத்தம் என்கிறார்கள். ஆனால் அதையும் தாண்டி ஒருமுறை வென்றவர். கடந்த முறை தோற்றார். இந்த முறை போராடக் கூடிய நிலையில் இருப்பதாக சொல்கிறார்கள்.

    அன்புமணியின் அரசியல் இப்படித்தான் ஆரம்பித்ததா? சுவாரஸ்ய தகவல்கள்

    வைத்தியலிங்கம்

    வைத்தியலிங்கம்

    இவரை எதிர்த்து அதிமுக சார்பாக களமிறங்குபவர் வைத்தியலிங்கம். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்படும் என அதிமுக, நிர்வாகிகள், தொண்டர்கள் என எல்லாருமே எதிர்பார்த்தனர். ஆனால் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அதிர்ச்சியும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. எனினும் வைத்தியலிங்கம் இதே தொகுதியை சேர்ந்தவர்தான். மேலும் வன்னியர் சாதியும்கூட. இதுவே அதிமுகவுக்கு பலம் என்றால், பாமகவின் செல்வாக்கு இங்கு அதிகமாகவே இருக்கிறது. அதனால் கொஞ்சம்கூட சளைக்காமல், பாமக தொண்டர்கள் வெற்றிக்காக களப்பணியில் இறங்கி உள்ளனர்.

    அதிருப்தி ஓட்டுகள்

    அதிருப்தி ஓட்டுகள்

    அமமுக சார்பில் தாம்பரம் நாராயணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நன்றாக ஜெயிக்க கூடிய தொகுதியை பாமகவுக்கு அதிமுக, விட்டு தந்துவிட்டதால், அந்த அதிருப்தியில் உள்ள உள்ளூர் அதிமுகவினர், எப்படியும் தங்களுக்குத்தான் ஓட்டு போடுவார்கள் என்றும் பாமக வெற்றிக்கு சரியான ஒத்துழைப்பினை அவர்கள் தர மாட்டார்கள் என்றும் என அமமுக நம்புகிறதாம். இதனால் வெற்றி தங்களுக்குதான் என்று தொகுதியில் குஷியாக வேலை பார்த்து வருகிறார்களாம்.

    பாமக களப்பணி

    பாமக களப்பணி

    ஆக மொத்தம், டி.ஆர்.பாலுவை பொறுத்தவரை, வைத்தியலிங்கத்தை லேசில் எடைபோட்டு விடாமல் மிக கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது. அதே நேரத்தில் அமமுக மீதும் ஒரு கண் வைக்க வேண்டி உள்ளது. இதற்கு திமுக கூட்டணியும், அக்கட்சிகளின் தொண்டர்களும் டி.ஆர்.பாலுவை வெற்றி பெற வைக்க அனைத்துவிதமான முயற்சிகளையும் எடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தமும் ஸ்ரீபெரும்புதூரில் ஏற்பட்டுள்ளது என்பதே கள நிலவரமாகும்.

    English summary
    There is a tough Fight between PMK candidate Vaithiyalingam and DMK Candidate TR Balu in Sriperumbudur Constitution
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X