சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆறுதல் சொல்ல போனா.. எங்களுக்கு அவங்க சொல்றாங்க.. அபிநந்தன் குடும்பத்தை சந்தித்த டிஆர். பாலு வியப்பு

அபிநந்தனின் பெற்றோரை டிஆர் பாலு மற்றும் பிரேமலதா நேரில் சந்தித்து பேசினார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆறுதல் சொல்ல போனா.. எங்களுக்கு அவங்க சொல்றாங்க - டிஆர். பாலு-வீடியோ

    சென்னை: "நாங்க ஆறுதல் சொல்லலாம்னு போனால் அவங்க எங்களுக்கு ஆறுதல் சொல்கிறார்கள்" என்று அபிநந்தனின் குடும்பத்தை சந்தித்து பேசிய பின் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

    போர் விமான தாக்குதலின்போது, நம் நாட்டு விமானி அபிநந்தன் காணாமல் போனார். பின்னர், பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் அவர் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் அபிநந்தன் குறித்த கவலை அதிகரித்துள்ளது.

    வீரர் அபிநந்தனின் குடும்பம் சென்னையில் உள்ளதால், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

    கமல்ஹாசன்

    கமல்ஹாசன்

    மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் போனில் கூப்பிட்டு, "அவர் வருவார்.. நம்பிக்கையுடன் இருங்கள்" என்று சொன்னார்.

    இந்திய விமானி அபிநந்தனை எப்போது விடுவிப்போம்?.. பாகிஸ்தான் பரபரப்பு விளக்கம்! இந்திய விமானி அபிநந்தனை எப்போது விடுவிப்போம்?.. பாகிஸ்தான் பரபரப்பு விளக்கம்!

    டி.ஆர்.பாலு

    டி.ஆர்.பாலு

    இந்நிலையில் சென்னை மாடம்பாக்கத்திலுள்ள அவர்களது வீட்டுக்கு திமுகவின் டி.ஆர். பாலு உள்ளிட்ட சிலர் சென்றனர். பிறகு செய்தியாளர்களிடம் டிஆர் பாலு பேசியபோது, "நாங்க ஆறுதல் சொல்லலாம்னு போனால் அவங்க எங்களுக்கு ஆறுதல் சொல்கிறார்கள். ரொம்ப தைரியமாக இருக்கிறார்கள்.

    ஒரு மாவீரர்

    ஒரு மாவீரர்

    எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. உண்மையிலேயே அபிநந்தன் ஒரு மாவீரர். இப்படி ஒரு பணியில் அவர் ஈடுபட்டுள்ளதற்கு குடும்பத்தார் ரொம்பவும் பெருமை கொள்கின்றனர்" என்றார்.

    வர்த்தமான்

    வர்த்தமான்

    கூட்டணி விவகாரத்தில் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் இன்னமும் திணறி வரும் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும் முதல்வேலையாக அபிநந்தனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அபிநந்தனின் தந்தை வர்த்தமானுடன் பிரேமலதா சந்தித்து பேசியதுடன், விரைவில் அபிநந்தன் நலமுடன் வீடு திரும்புவார் என்று நம்பிக்கை வார்த்தைகளை தெரிவித்து வந்திருக்கிறார்.

    Read more : போர்ப் பதட்டத்தைக் காரணம் காட்டி தேர்தலை தள்ளிப் போடுவார்களா? Read more : போர்ப் பதட்டத்தைக் காரணம் காட்டி தேர்தலை தள்ளிப் போடுவார்களா?

    English summary
    DMK TR Balu and DMDK Premalatha meet Abhinandan's family near Chennai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X