சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மொத்தமும் ஆக்சிஜன்தான்.. செவ்வாயை சுற்றி உருவான திடீர் "பச்சை வளையம்".. விஞ்ஞானிகள் செம விளக்கம்!

Google Oneindia Tamil News

சென்னை: செவ்வாய் கிரகத்தை சுற்றி புதிதாக பச்சை நிறத்தில் வளையம் ஒன்று தோன்றி இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

Recommended Video

    செவ்வாய் கிரகத்தை சுற்றி திடீர் பச்சை வளையம்... விஞ்ஞானிகள் ஷாக்

    உலகம் முழுக்க செவ்வாய் கிரகம் மீது தீவிரமான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. முக்கியமாக செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்ற உலகின் பல நாடுகள் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

    அதிலும் நாசா, சீனா, ஸ்பேஸ் எக்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் இதில் மிக தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. அங்கு மனிதர்களை அனுப்ப இப்போதே அவர்கள் ராக்கெட்டுகளை உருவாக்கி வருகிறார்கள்.

    இந்தியாவில் சூரிய கிரகணம் தொடங்கியது.. மிக நீளமான கிரகணம் இதுவாகும்!இந்தியாவில் சூரிய கிரகணம் தொடங்கியது.. மிக நீளமான கிரகணம் இதுவாகும்!

    பச்சை வளையம்

    பச்சை வளையம்

    இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தை சுற்றி புதிதாக பச்சை நிறத்தில் வளையம் ஒன்று தோன்றி இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். பச்சை நிறத்தில் மினு மினுத்துக் கொண்டே, பார்க்கவே கண்ணை கவரும் வகையில் இந்த வளையம் இருக்கிறது. டிஜிஓ எனப்படும் Trace Gas Orbiter (TGO) சாட்டிலைட் மூலம் இந்த வளையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இரண்டு நாடுகள்

    இரண்டு நாடுகள்

    ஐரோப்பா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து அனுப்பிய சாட்டிலைட் ஆகும் இது. பூமிக்கு வெளியே வேறு ஒரு கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் வளையம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான காரணத்தை தற்போது ரஷ்யா - ஐரோப்பா விஞ்ஞானிகள் விளக்கி உள்ளனர். அதன்படி இந்த வளையம் அந்த வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்சிசன் காரணமாக ஏற்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    இந்த ஆக்சிசன் சூரிய ஒளி காரணமாகவும், அழுத்தம் காரணமாகவும் துள்ளி குதிக்கிறது. இதனால் அது ஒரு பச்சை வளையமும் போல மாறுகிறது. அதேபோல் சூரியனில் இருந்து செவ்வாய் கிரகம் நோக்கி வரும் கதிர்கள், மூலக்கூறுகள் செவ்வாயில் உள்ள வளிமண்டலத்தில் இருக்கும் மூலக்கூறுகள் ஒன்றாக மோதிக்கொள்ளும். இதன் காரணமாக இந்த வளையம் தோன்றுகிறது.

    பூமியிலும் உள்ளது

    பூமியிலும் உள்ளது

    பூமியிலும் கூட இதனால் வளையம் உள்ளது. ஆனால் அது வேறு மாதிரி இருக்கும். அதேபோல் பூமியில் இருக்கும் காந்த புலம் காரணமாக அதன் பண்புகள் பெரிய அளவில் பாதிக்கப்படும். பூமியில் காணப்படும் இந்த வளையம் இரவு நேரத்தில்தான் தெரியும். பூமியில் தெரியும் இந்த வளையத்திற்கு, செவ்வாய் கிரகத்தில் தெரியும் வளையத்திற்கு நிறைய வேறுபாடு இருக்கிறது.

    மாறுபாடு

    மாறுபாடு

    இரண்டும் ஒன்றல்ல. பூமியில் தெரிவது போல இதுவரை உலகில் எங்கும் வளையம் இல்லை. செவ்வாயில் தோன்றி உள்ள வளையம் வித்தியாசமானது. அங்கு இருக்கும் ஆக்சிசன் காரணமாக இந்த வளையம் தோன்றி உள்ளது. ஆனால் இதன் அர்த்தம் அங்கு மனிதர்கள் வாழலாம் என்பது அல்ல.அங்கு இருக்கும் ஆக்சிசன் காரணமாக மனித வாழக்கைக்குஎல்லாம் வாய்ப்பு இல்லை.

    செவ்வாய் கிரகம்

    செவ்வாய் கிரகம்

    ஆனால் இந்த வளையம் காரணமாக செவ்வாய் கிரகம் குறித்து மேலும் தெரிந்து கொள்ள முடியும். அதன் பண்புகளை ஆராய்ச்சி செய்ய முடியும். இந்த வளையம் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பார்த்தால் மிக பெரிதாக தெரிகிறது. அதனால் இதன் காரணம் தெரியவில்லை. இது இன்னும் 40 வருடங்கள் இப்படி தெரிய வாய்ப்பு உள்ளது. அதேபோல் செவ்வாயில் தரையில் இருந்து 80 கிமீ தூரத்தில் இந்த வளையம் உள்ளது, என்று கூறியுள்ளனர்.

    English summary
    Trace Gas Orbiter finds a beautiful green glow around Mars planet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X