சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சஸ்பெண்டெல்லாம் கண்துடைப்புதான் போல.. காவலரை கீழே தள்ளிய இன்ஸ்பெக்டருக்கு ஒரே மாதத்தில் மீண்டும் பணி

Google Oneindia Tamil News

Recommended Video

    போலீஸாருக்கு இடையில் மோதல்.. சிசிடிவி மூலம் வெளிவந்த பின்னணி!-வீடியோ

    சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியாற்றியவர், போலீஸ் ஆய்வாளரை கீழே தள்ளிவிட்டதால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த நவம்பர் 21-ஆம் ஆண்டு பணியில் இருந்த போக்குவரத்து ஆய்வாளர் தருமன், தனது தாயின் திதிக்காக விடுப்பு அளிக்குமாறு ஆய்வாளர் ரவிச்சந்திரனிடம் கேட்டார். அதற்கு அவரோ விடுப்பெல்லாம் கொடுக்க முடியாது என்றுவிட்டார்.

    இதனால் தருமன் அன்றைய தினம் பணிக்கு வந்ததுடன் விரக்தியில் ரவிசந்திரன் குறித்து வாக்கிடாக்கியில் பேச அது ஊருக்கே கேட்டது. இந்த விவகாரம் துணை கமிஷனர் மற்றும் இணை கமிஷனருக்கு சென்றது.

    ஆத்திரம்

    ஆத்திரம்

    அவர்கள் ரவிச்சந்திரனை கண்டித்ததோடு, தருமனுக்கு விடுப்பும் கொடுத்தனர். மேலும் கட்டுப்பாட்டு அறைக்கு வருமாறு ரவிச்சந்திரனுக்கு உத்தரவிட்டனர். இதனால் தருமன் மீது ரவிக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    சிசிடிவியில் பதிவு

    சிசிடிவியில் பதிவு

    பின்னர் அவரை பழி வாங்குவதற்காக வழியில் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த தருமனை மடக்கி பிடித்து கீழே தள்ளி அவரது வாயில் மதுவை ஊற்றிவிட்டார். இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகி வைரலானது.

    ஒதுக்கீடு

    ஒதுக்கீடு

    இதையடுத்து ரவிச்சந்திரனுக்கு சஸ்பெண்ட் ஆர்டர் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வரை மருத்துவ விடுப்பில் தருமன் உள்ளார். இந்நிலையில் சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்த ரவிச்சந்திரனுக்கு அம்பத்தூர் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    சக காவலர் என்றும் பாராமல் அவரை கீழே தள்ளி கிட்டதட்ட கொலை முயற்சியில் இறங்கிய ரவிச்சந்திரனுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒரே மாதத்தில் பணி வழங்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    A Traffic Inspector who attacks another inspector in Teynampet gets posting in Ambattur after 30 days if his suspension.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X