சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு.! ஜூன் 29 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு துவக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: 2019-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு, அடுத்த வாரம் சனிக்கிழமையன்று தொடங்குகிறது.

தீபாவளி பண்டிகை என்றாலே நம் அனைவருக்கும் உற்சாகம் கரை புரண்டோடும். பெரியவர் முதல் சிறியவர்கள் வரை தீபாவளி திருநாளை எதிர்பார்க்காதவர்களே இருக்க முடியாது. அப்படிப்பட்ட தீபாவளி திருநாள் நடப்பாண்டு அக்டோபர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

Train ticket booking begins on June 29 for diwali festival

இந்நிலையில் பணி, தொழில், வியாபாரம், படிப்பு போன்ற காரணங்கள் நிமித்தமாக தலைநகர் சென்னை உட்பட கோவை, திருச்சி, நெல்லை என பல்வேறு முக்கிய நகரங்களில் தங்கியுள்ள வெளிமாவட்ட மக்கள், தீபாவளி திருநாளை கொண்டாட சொந்த ஊர் செல்ல தற்போதிலிருந்தே மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பட்டைய கிளப்பும் அதிமுக.. துவம்சம் செய்யும் திமுக... ஒரே நாளில் சூடான தமிழகம்.. தண்ணீருக்காக!பட்டைய கிளப்பும் அதிமுக.. துவம்சம் செய்யும் திமுக... ஒரே நாளில் சூடான தமிழகம்.. தண்ணீருக்காக!

லட்சக்கணக்கான மக்கள் தீபாவளிக்காக ஒரே நேரத்தில் சொந்த ஊர் செல்வது வழக்கம். பேருந்துகள், ரயில்கள் என அனைத்திலும் மக்கள் வெள்ளமே காணப்படும்.

இச்சூழலில் தீபாவளிக்காக ஊருக்கு பயணம் செய்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் சனிக்கிழமை அதாவது ஜூன் 29ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள், ஜூன் 29ம் தேதி முதல் ரயில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே ரயில் டிக்கெட் முன் பதிவு செய்வோர், 120 நாட்களுக்கு முன்னதாக தான் முன்பதிவு செய்ய முடியும். அந்த வகையில் அக்டோபர் 27-ம் தேதி ரயிலில் செல்ல ஜூன் 29-ம் தேதியும், அக்டோபர் 26-ம் தேதி ரயிலில் பயணிக்க வரும் ஜூன் 30-ம் தேதியும், அக்டோபர் 25-ம் தேதி ரயிலில் பயணம் செய்ய ஜூலை 1ம் தேதியும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்காக ரயில்களில் ஊருக்கு செல்ல விரும்புவோர் தெற்கு ரயில்வே இணையதளத்தில் ஜூன் 29 காலை 8 மணிக்கு டிக்கெட் முன் பதிவு செய்யலாம்

English summary
Train booking for those traveling to their hometowns to celebrate the 2019 Diwali festival begins on Saturday next week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X