சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 13 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது- கவுன்ட்டர்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 7-ந் தேதி முதல் இயக்கப்படும் 13 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. டிக்கெட் முன்பதிவுக்காக கவுன்ட்டர்களில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது.

கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் 5 மாதங்களாக அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டிருந்தன. பிற மாநில தொழிலாளர்களுக்காக மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

Train ticket bookings resume from today

இதனிடையே லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து செப்டம்பர் 7-ந் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன. முதல் கட்டமாக தமிழகத்துக்குள் 13 சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு தெற்கு ரயில்வே முடிவு செய்திருக்கிறது.

சென்னையில் இருந்து கோவை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடிக்கும் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கும் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவுகள் இன்று காலை ரயில் நிலையங்களின் கவுன்ட்டர்களில் காலை 8 மணிக்கு தொடங்கியது.

தமிழகத்தில் செப்.7 முதல் 9 சிறப்பு ரயில்கள் இயக்கம்- நாளை முதல் முன்பதிவு தொடக்கம்- முழு விவரம்தமிழகத்தில் செப்.7 முதல் 9 சிறப்பு ரயில்கள் இயக்கம்- நாளை முதல் முன்பதிவு தொடக்கம்- முழு விவரம்

Recommended Video

    Modi-யின் Twitterஐ Hack செய்த John Wick யார்? | Oneindia Tamil

    காலை 8 மணிமுதலே டிக்கெட் கவுன்ட்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது. ரயில் நிலையங்களுக்குள் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பதால் கவுன்ட்டர்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. டிக்கெட் கவுன்ட்டர்களில் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு முன்பதிவு நடைபெற்று வருகிறது.

    English summary
    Train ticket bookings resume from today for 13 Special Trains in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X