சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்...5 டிஜிபிக்களுக்கு பதவி உயர்வு உத்தரவு...அரசு அறிவிப்பு

Google Oneindia Tamil News

தமிழகத்தில் 90 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகள் ஏடிஜிபி ரேங்கில் உள்ள 5 அதிகாரிகளை டிஜிபிக்களாக நிலை உயர்த்தி பட்டியல் வெளியிட்ட நிலையில் தற்போது 5 பேருக்கும் டிஜிபி பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இவர்களுடன் சேர்த்து 11 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

டிஜிபிக்களாக பதவி உயர்வு

Transfer of 11 IPS officers ... Promotion order for 5 DGPs ... Government announcement

ஏடிஜிபிக்கள் நிலை உயர்வு அறிவிப்பு

தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளில் 1990 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேர் ஏடிஜிபிக்களாக பல்வேறு பொறுப்புகளில் உள்ளனர். காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவலர் வீட்டுவசதித்துறை ஏடிஜிபி ஏ.கே.விஸ்வநாதன், உணவுகடத்தல் தடுப்புப்பிரிவு ஏடிஜிபி ஆபாஷ்குமார், சீருடைப்பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி சீமா அகர்வால், அயல்பணியில் ஐபி ஏடிஜிபியாக இருக்கும் ஏடிஜிபி ரவிச்சந்திரன் ஆகியோர் டிஜிபிக்களாக நிலை உயர்த்தப்பட்டனர்.

பதவி உயர்வு, இடமாற்றம்

டிஜிபிக்கள் பதவி உயர்வு, ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

இந்நிலையில் மத்திய அரசு தமிழக அரசின் பரிந்துரையை ஒப்புக்கொண்ட நிலையில் 5 ஏடிஜிபிக்களுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்கள் அனைவரும் டிஜிபிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வகிக்கும் பொறுப்புகள் அப்படியே டிஜிபி பதவியாக நிலை உயர்த்தப்பட்டு டிஜிபியாக அப்பொறுப்புகளில் தொடர்கிறார்கள்.

Transfer of 11 IPS officers ... Promotion order for 5 DGPs ... Government announcement

அரசின் அறிவிப்பு

5 டிஜிபிக்கள் உள்ளிட்ட 11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

5 டிஜிபிக்கள் உள்ளிட்ட 11 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார். அவர் பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு, இடமாற்றமும் அவர்கள் முன்பு வகித்த பதவியுடன்.

8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது! 8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது!

1.சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று சென்னை காவல் ஆணையராக தொடர்கிறார்.

2. காவலர் வீட்டு வசதி வாரிய ஏடிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் பதவி உயர்வு பெற்று டிஜிபியாக அதே பொறுப்பில் தொடர்கிறார்.

3. உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஏடிஜிபி ஆபாஷ்குமார் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று அதே பொறுப்பில் தொடர்கிறார்.

4. மத்திய அரசின் அயல்பணியில் மத்திய உளவுத்துறை டிஜிபியாக பதவி வகிக்கும் ரவிச்சந்திரன் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று அதே பொறுப்பில் தொடர்கிறார்.

5.காவல் சீருடை பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி சீமா அகர்வால் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று டிஜிபியாக அதே பொறுப்பில் தொடர்கிறார்.

6. சென்னை காவல் தலைமையிட ஏடிஜிபி ஷங்கர் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை காவல் நிர்வாக ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

7. சைபர் கிரைம் பிரிவு ஏடிஜிபியாக பதவி வகிக்கும் வெங்கட்ராமன் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை தலைமையிட ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

8. தொழில்நுட்பப்பிரிவு ஏடிஜிபி அம்ரேஷ் புஜாரி இடமாற்றம் செய்யப்பட்டு சைபர் பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Transfer of 11 IPS officers ... Promotion order for 5 DGPs ... Government announcement

9.மாநில குற்ற ஆவண காப்பகப் பிரிவு ஏடிஜிபி வினித் தேவ் வான்கடே இடமாற்றம் செய்யப்பட்டு தொழில்நுட்பப்பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

10. குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அமலாக்கப்பிரிவை கூடுதலாக கவனிப்பார்.

11. கல்வி விடுமுறையில் இருந்து பணிக்கு திரும்பிய சிபிசிஐடி புலனாய்வுப்பிரிவு ஐஜி கபில்குமார் சரத்கர், இடமாற்றம் செய்யப்பட்டு அமலாக்கப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உள்துறைச் செயலர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Transfer of 11 IPS officers ... Promotion order for 5 DGPs ... Government announcement
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X