• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நிஜமான "காஞ்சனா".. அலறி ஆவேசமாகி அப்பாவியை அடித்தே கொன்ற "கோடாங்கி".. உறைந்தே போன சென்னை.. கொடுமை!

|

சென்னை: அப்படியே அச்சு அசல் காஞ்சனா மாதிரியே கெட்டப்.. ஆனால் ஆவி இல்லை.. பாவி.. ஒரு நபரை பேய் ஓட்டுவதாக சொல்லி கொன்றே விட்டார் இந்த திருநங்கை!

பழைய வண்ணாரப்பேட்டை ஸ்ரீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆயிஷா.. 19 வயதாகிறது.. இவர் கணவர் பெயர் மகபூப் பாஷா... மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தவர். இவருக்கு பேய் பிடித்திருக்கும் என்று ஆயிஷாவிடம் யாரோ சொல்லி உள்ளனர்.

அதனால், கடந்த ஜுன் மாதம் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி அருகே இருக்கும் தர்காவில் பேய் ஓட்ட கணவனை அழைத்து சென்றிருக்கிறார்... அந்த தர்காவிலேயே 2 நாட்கள் வைத்து பேய் ஓட்ட மந்திரமும் ஓதியுள்ளனர்.

இழுத்து போர்த்தி நிற்கும்.. இவருக்கு பேருதான் கயல்விழி.. செய்கையெல்லாம்... அடேங்கப்பா!!

மகபூர்

மகபூர்

ஆனால் அங்கு மகபூப் பாஷா குணமாகவில்லை.. எனவே, செங்குன்றம் அருகே உள்ள புத்தூர் அம்மன் கோவில் பக்கத்தில் பேய் ஓட்டும் நபரிடம் அழைத்து செல்லுங்கள் என்று ஆயிஷாவின் சொந்தக்காரர்கள் சொல்லி உள்ளனர்.. ஆயிஷாவும் கணவனை அழைத்து கொண்டு, அந்த அம்மன் கோயில் பகுதிக்கு வந்தார்.. பேய் விரட்டும் தொழில் செய்பவர் பெயர் சங்கர்.. இவர் ஒரு திருநங்கை.. கோடாங்கி என்று தன் பெயரை மாற்றி வைத்து கொண்டார்.

காஞ்சனா

காஞ்சனா

பார்ப்பதற்கு அப்படியே "காஞ்சனா" படத்தில் வரும் சரத்குமார் போலவே இருக்கிறார்.. அதே ரெட் கலர் புடவை.. பெரிய சைஸ் குங்குமம் என காட்சி தருகிறார் இந்த கோடாங்கி... மகபூப் பாஷாவுக்கு பேய் பிடித்துள்ளதாக கோடாங்கியும் சொன்னார்.. அங்கேயே மகபூப் பாஷாவை 10 நாட்கள் வைத்து கோடாங்கி பூஜை செய்திருக்கிறார். ஒருநாள் திடீரென கோடாங்கி ஆவேசமாகிவிட்டார்.. ஒரு பிரம்பை எடுத்து கொண்டு நோயாளி மகபூப்பை சரமாரியாமாக அடித்தார்.. உடல் முழுவதும் பிரம்படி வலியால் மெகபூப் அலறி துடித்தார்.

 சுருண்டு விழுந்தார்

சுருண்டு விழுந்தார்

எங்கே அடிக்கிறோம் என்றுகூட தெரியாமல், கோடாங்கி மகபூப்பின் தலையிலும் மிக கொடுமையாக அடித்துள்ளார். உடம்பெல்லாம் ரத்தம் கொட்ட, அங்கேயே சுருண்டு விழுந்தார் மகபூப். இதையடுத்து, கடந்த ஜுன் மாதம் 9-ம் தேதி மகபூப் பாஷாவுக்கு உடல்நிலை ரொம்ப மோசமாகிவிட்டது.. அதனால், உடனடியாக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

 உயிரிழந்தார்

உயிரிழந்தார்

ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆயிஷா வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் தந்தார்.. போலீசாரும் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். அப்போதுதான், உடலில் பல இடங்களில் ஏற்பட்ட காயங்களால் ரத்தக்கட்டு ஏற்பட்டிருந்தது போஸ்ட் மார்ட்டத்தில் தெரியவந்தது. மேலும், அவர் தலையில் உண்டான ரத்தக்கட்டு மூலமாக உடலில் பலவித உறுப்புகள் செயலிழந்து உள்ளன.. இறுதியில் மூச்சுத்திணறலும் ஏற்பட்டு, அதனாலேயே உயிரிழந்ததும் தெரியவந்தது.

கைது

கைது

முதலில், மூச்சுத்திணறலால் உயிரிழந்ததாக சொல்லப்பட்டதால், ஒருவேளை கொரோனால் மகபூப் இறந்திருக்கலாம் என்று நினைத்திருக்கிறார்கள்.. பிறகுதான் இது கோடாங்கி செய்த கைங்கரியம் என்று தெரியவந்தது. பேய் ஓட்டும்போதும் கோடாங்கி அடித்ததால், படுகாயம் ஏற்பட்டு, அந்த காயத்தினால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, உயிர் பிரிந்துள்ளது.. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து திருநங்கை கோடாங்கியை வண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை தந்துவிட்டது. நாட்டில் எத்தனை ஆஸ்பத்திரிகளை கட்டி வைத்து என்ன பயன்? இன்னமும் இல்லாத பேயை இருப்பதாக நம்பிக் கொண்டு, ஏமாற்றி வரும் நபர்களையும், ஏமாந்து போகும் நபர்களையும் என்ன சொல்வது!?

 
 
 
English summary
Transgender Shankar beaten to death for exorcism in Chennai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X