• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

51வது தெருவில் அம்மா ரெஸ்டாரண்ட்.. நியூயார்க் நகரில் ஒரு நாள்.. தமிழரின் ஜில் அனுபவம்

|

சென்னை: நமது மக்களுக்கு, அமெரிக்கா ஒரு கனவு தேசம். ஒருமுறையாவது போய் பார்த்துவிட்டு வர வேண்டும் என்பது வாழ்நாள் லட்சியம். இப்படித்தான், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த, இளைஞர், முத்துச் செல்வன் கிருஷ்ணன், தனது குடும்பத்தோடு, அமெரிக்காவின், முக்கிய நகரமான நியூயார்க் சென்றார்.

பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நியூயார்க்கை பார்த்திருப்போம் என்றாலும், அதன் வாழ்க்கை முறையை நேரில் சென்று பார்த்த அனுபவத்தில் எழுதியுள்ளார், முத்துச் செல்வன். 'நானும் நியூயார்க் நகரமும் ' என்ற தலைப்பில், ஒன்இந்தியாதளத்திற்கு அவர் எழுதிய கடிதத்தை நீங்களும் பாருங்கள்.

 Travel: A Tamil youths one day New York life

நெற்றியில் நாமம், வெள்ளை நிறம், குள்ளமான உருவம் "Keep Quit! Keep Quit!" என்ற சத்தம்.. அவர்தான் எங்களது பள்ளியின் சமூக அறிவியல் ஆசான் திரு அரங்கநாதன் ஐயா அவர்கள்.

சமூக அறிவியலை அவரைத் தவிர யாராலும் அவ்வளவு சுலபமாக சொல்லித் தர முடியாது. வேர்ல்ட் மேப் இன்றைக்கும் கண்ணுக்குள்ளே இருக்குதுன்னா அதற்கு அவர்தான் காரணம். இன்றும் தலையைத் தடவி பார்த்தால் அவர் கொட்டியது வலிக்கும்.

எக்ஸாம் எழுதிக் கொண்டு இருக்கும்போதே, சமுக அறிவியல் சார் அரங்கநாதன் அருகில் வந்தால் பயமாக இருக்கும். மேப்பில் அமெரிக்க கண்டத்தை சரியாக குறிக்கிறோமா என பார்ப்பார். இல்லையென்றால் தலையில் குட்டு விழும். பத்தாம் வகுப்பு படிக்கும் போதே ஒரு பைசா செலவில்லாமல் உலகமெல்லாம் சுற்றிக் காண்பிப்பார்.

 Travel: A Tamil youths one day New York life

விநாயகரைப் போல உலகைச் சுற்றி வர வேண்டும் என்கிற ஆசை எனக்கு அங்கே தான் ஆரம்பித்து இருக்க வேண்டும். அப்படி கண்டிப்பாக சுற்றி பார்க்க நினைத்த ஊரில் ஒன்றுதான் நியூயார்க். அப்புறம், வேட்டையாடு விளையாடு, சில்லுனு ஒரு காதல், விண்ணைத் தாண்டி வருவாயா போன்ற படங்களின் மூலமாக இன்னும் அதிகமாகியது. இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின்னர், அந்த ஆசை, இன்னும் அதிகமாகியது.

அந்த நாளும் வந்தது.. ஒரு வழியா மைத்துனரின் வழிகாட்டுதலின்படி நியூயார்க் LGA ஏர்போர்ட்டில் வந்து இறங்கினோம். அங்கு எல்லா இடங்களுக்கும் செல்ல ஒரு பாஸ் எடுத்துக்கணும். பஸ், ட்ரெய்ன் எதுல வேணும்னாலும், எத்தனை தடவை யும் ட்ராவல் பண்ணலாம். எதையாவது யாரிடமாவது கேட்டு விட்டு பதிலுக்காக அவர்களின் வாயைப் பார்த்துக் கொண்டே இருப்பேன்.

 Travel: A Tamil youths one day New York life

முதலில் சென்ட்ரல் பார்க் சென்றோம். பல கிலோ மீட்டருக்கு பரவிக் கிடக்கு. விண்ணைத் தாண்டி வருவாயா, "அன்பில் அவன்.." பாட்டு முழுவதும் அங்கு தான் எடுத்துருக்காங்க. வீட்டில் இருந்து கொண்டு சென்ற, காலை சாப்பாட்டை அங்கு வைத்து சாப்பிட்ட ஒரே குடும்பம் நாங்க தான். மதியம் வரை சுற்றினோம். நடக்க சக்தி இல்லை. அவ்வளவு தூரம். முடியாமல் திரும்பினோம்.

பசி வயிற்றைக் கிள்ளியது. சுத்த சைவம் எல்லாம் நியூயார்க் போய்டாதீங்க. வெஜ் ரெஸ்டாரண்ட்க்கு கூகிள் கிட்ட கேட்டோம், ஐம்பத்தி ஒன்றாவது தெருவில் அம்மா ரெஸ்டாரண்ட் இருக்குதுனு சொல்லுச்சு. நியூயார்க் லோக்கல் ட்ரெய்ன் SubWayன்னு சொல்லுறாங்க. சரி அதில் போலாம்னு பிளான் பண்ணி கூகுளை கேட்டு ஒரு ஸ்டேஷன்ல போய் நின்றோம். அங்க ஒரு வெள்ளைக்கார பெண் சொன்னார், இன்னும் ஒரு படி கீழ போங்கன்னு. பூமிக்கு உள்ளயே மாடி, மாடி யா கட்டி வைச்சி இருக்காங்க. பியர் கிரில்ஸ் அடிக்கடி ஞாபகத்துக்கு வந்து போனார்.

ஒருவழியா பலாக்காய் பிரியாணி சாப்பிட்டு முடித்து, 6வது தெருவில் 34வது அவென்யூ வில் இருக்கும் ஹோட்டல் பொய் சேர்ந்தோம். ஒரு குட்டித்தூக்கம் போட்டு விட்டு ஊர் சுற்ற கிளம்பினோம். ஹோட்டலுக்கு பக்கத்துக்கு அவென்யூவில்தான், எம்பயர் ஸ்டேட் பில்டிங். அதான்ப்பா.. ஜீன்ஸ்ல ஐஸ்வர்யா ராய், பிரசாந்த் ஆடுவாங்களே, அதேதான். ஆத்தாடி எம்மாம் பெருசு! அடுத்து என்ன பார்க் தான். பிரையண்ட் பார்க் நல்லா இருந்துச்சு.

நிறைய போட்டோஸ் எடுத்தோம். அப்புறம் சென்ட்ரல் ஸ்டேஷன் போனோம். ரொம்ப பழமையான ரொம்ப பெரிய ஸ்டேஷன் அதுதான். நம்மூரு சென்ட்ரல் ஸ்டேஷன் மாதிரி. ராக் பெல்லெர் சென்டர் நம்மூரு T-நகர் மாதிரி நிறைய காம்ப்ளெக்ஸ் ஹோட்டல்ஸ், ரோடு எல்லாம் அலங்காரம் பண்ணி வச்சு இருப்பாங்க. நம்ம ஸ்பென்சர் பிளாசா மாதிரிதான், நாங்க இங்கே எதுவுமே வாங்கலை. சும்மா சுத்தி மட்டும்தான் பார்த்தோம்.

ஆன்லைனில் மதுபான ஆர்டரை தொடங்கியது ஸ்விக்கி.. வீட்டு வாசலிலேயே சரக்கை பெறுவது எப்படி?

நியூயார்க்ல, நாலு தெருக்கள் சந்திக்கிற இடம் முழுவதும் டைம்ஸ் ஸ்கொயர்ன்னு சொல்ராங்க. அங்கே ஒவ்வொரு இடத்திலும் குரூப் குரூப்ப்பா பாட்டு பாடிகிட்டு டான்ஸ் ஆடிக்கிட்டு இருப்பாங்க. எங்க சுத்தினாலும் நைட் அங்கே வந்துடுறாங்க. தூங்கா நகரம் மதுரை மாதிரி.

அடுத்து என்ன சாப்பாடுதான். கூகுளை அலசினோம். சென்னை வாலான்னு ஒரு ஹோட்டல் பார்த்து தேடிபோனோம். பூட்டி இருந்தது. கடைசியாக தேடி பிடித்து, ஆந்திரா பேமிலி நடத்துற பாட்டியாலா ஹோட்டல் போனோம். சாப்பாடு நன்றாக இருந்தது. அதன் பின்னர் அங்கிருந்து கிளம்பும் வரை எங்களுக்கு அங்கு தான் சாப்பாடு.

 
 
 
English summary
How the New York life feels me on a fine day, here our reader Muthuselvan explained it.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X