சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குழந்தை மாவட்டம் கள்ளக்குறிச்சி .. இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்.. கொண்டாடும் நெட்டிசன்கள்

ட்ரெண்டாகி வருகிறது கள்ளக்குறிச்சி மாவட்டம் ஹேஷ்டேக்

Google Oneindia Tamil News

சென்னை: ஒரே நாளில் கள்ளக்குறிச்சி ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

ஜெயலலிதா இருந்தபோதே தனி மாவட்ட கோரிக்கை எழுப்பப்பட்டது. அதற்கு நிறைய காரணங்களும் இருந்தன. குறிப்பாக கல்வராயன் மலையை சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராம மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களுக்கு கலெக்டர் ஆபீஸ் போக வேண்டும் என்றால்கூட குறைஞ்சது 110 கி.மீ., துாரம் போக வேண்டியிருக்கிறது. அது மட்டும் இல்லை, மாவட்ட தலைநகருக்கு செல்ல அதிக துாரம் பயணம் செய்யும் மக்கள் இந்த மாவட்ட மக்களாகத்தான் இருக்க முடியும். விழுப்புரம் போவதானால்கூட அதுக்கென்று ஒருநாளை ஒதுக்க வேண்டி நிலை உள்ளது.

நிர்வாக சிக்கல்

அதேபோல் மாநிலத்திலேயே பெரிய மாவட்டம் என்பதால், நிர்வாக ரீதியான சிக்கல்கள் உள்ளதால், அதிகாரிகளுக்கும் பெரும் சிரமம் உள்ளது. இதனை தீர்ப்பது அவ்வளவு எளிது கிடையாது. கள்ளக்குறிச்சியை சுற்றிலும் நான்கைந்து ஊர்கள்தான் ஓரளவு வளர்ந்த நிலையில் இருக்கிறது. மற்றவை எல்லாமே இன்னும் கிராமங்கள்தான்.

எம்எல்ஏ பிரபு

அதுவும் இல்லாமல், பல கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாக போய் சேரவில்லை. அதனால்தான் மாவட்டத்தை பிரிக்க இப்படி ஒரு கோரிக்கை ஜெயலலிதாவிடம் வைக்கப்பட்டது. அந்த தொகுதி எம்எல்ஏவான பிரபுவும் இதுதொடர்பாக தீவிரமாக முயற்சித்து வந்தார். இதையடுத்து கடந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக்கப்படும் என்று ஜெயலலிதாவும் வாக்குறுதி அளித்தார்.

33-வது மாவட்டம்

நீண்ட நாள் கோரிக்கை இன்று நிறைவேறியுள்ளதால் அம்மாவட்ட மக்கள் சந்தோஷத்தில் உள்ளனர். அதைவிட பிரபு அவரது ஆதரவாளர்கள், அதிமுகவினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது #Kallakurichi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் அளவில் ட்ரெண்டாகிறது. தமிழகத்தின் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஹேஷ்டேக்

கள்ளக்குறிச்சி என்னும் புதிய மாவட்டம் அமைக்கப்படும் என முதல்வர் சபையில் அறிவித்த உடனேயே ட்விட்டர் முழுக்க புது மாவட்டத்தை பற்றின பேச்சுதான். ட்விட்டரில் #Kallakurichi என்ற ஹேஷ்டேக் பெரிய அளவில் ட்ரண்டு ஆக ஆரம்பித்துவிட்டது. இந்த அறிவிப்பினை நிறைய பேர் பகிர்ந்து வருகிறார்கள்.

ஏ.ஆர். முருகதாஸ்

சும்மா பகிரவில்லை.. கூடவே டைரக்டர் ஏ.ஆர். முருகதாசையும் சேர்த்து டேக் செய்கிறார்களாம். ஏனெனில் அவரது சொந்த ஊர் கள்ளக்குறிச்சிதான். அதுவும் இல்லாமல் அவர் தன்னுடைய எல்லா படங்களிலும் கள்ளக்குறிச்சி பற்றின ஒரு சீனை எங்காவது நுழைத்து விடுவார். ஆக மொத்தம் மாவட்டம் பிரிவதற்குள்ளேயே "கள்ளக்குறிச்சி ஹேஷ்டேக்" ட்ரண்டாகி வந்து கொண்டிருக்கிறது.

English summary
TN CM Edappadi Palaniswami announces about Kallakurichi District. This announcement goes viral in Social Media
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X