சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆடு, கோழி பலியிடல் பஞ்சாயத்து.. அன்று தமிழ்நாடு... இன்று திரிபுரா

Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீரை தொடர்ந்து திரிபுராவிலும் பதற்றம்

    சென்னை: கோவில்களில் ஆடு, கோழி பலியிடும் விவகாரங்களில் முதலில் சிக்கியது தமிழ்நாடு. தற்போது 2-வதாக சிக்கியிருக்கிறது திரிபுரா.

    தமிழகத்தில் 2-வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2003-ம் ஆண்டு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தார். தமிழகத்தில் கோவில்களில் ஆடு, கோழிகளை பலியிடக் கூடாது என்பதுதானன் அந்த அதிரடி உத்தரவு.

    இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் முருகன், சிவன், பெருமாள் வழிபாடுகளைவிட அதிகமாக குல தெய்வ வழிபாடுகள் ஒவ்வொரு குடும்பமும் கடைபிடிக்கிறது.

    காஷ்மீரில் 370வது பிரிவு... திரிபுராவில் ஆடு, கோழி தடை... டென்ஷனில் எல்லை பிரதேசங்கள்காஷ்மீரில் 370வது பிரிவு... திரிபுராவில் ஆடு, கோழி தடை... டென்ஷனில் எல்லை பிரதேசங்கள்

    ஆடு கோழி பலியிடல் தடை நீக்கம்

    ஆடு கோழி பலியிடல் தடை நீக்கம்

    இந்த குலதெய்வ கோவில்கள் பலவற்றில் பல்லாயிரம் ஆண்டுகளாக ஆடு, கோழிகளை பலியிடுதல் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் ஜெயலலிதா விதித்த தடை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுவும் 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நெருங்கிய நிலையில் ஜெயலலிதா அரசின் உத்தரவு அதிமுகவுக்கு பெரும் நெருக்கடியாக இருந்தது. இதனால் வேறு வழியே இல்லாமல் ஆடு, கோழி பலியிடுதலுக்கு விதித்த தடையை நீக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார் ஜெயலலிதா.

    இந்தியாவுடன் இணைந்த திரிபுரா

    இந்தியாவுடன் இணைந்த திரிபுரா

    தற்போது திரிபுரா மாநிலமும் ஆடு, கோழி பலியிடுதல் விவகாரத்தில் சிக்கியிருக்கிறது. ஆதி பழங்குடிகளின் தேசம் திரிபுரா. இம்மாநிலம் 1949-ம் ஆண்டுதான் இந்தியாவுடன் இணைந்தது.

    திரிபுராவில் ஆடு கோழி பல்லியிட தடை

    திரிபுராவில் ஆடு கோழி பல்லியிட தடை

    அப்போது போடப்பட்ட ஒப்பந்தத்தின் முக்கியமான ஒரு சரத்து, 14 கோவில்களுக்கு திரிபுரா அரசு உதவியுடன் ஆடுகளை பலியிடும் நடைமுறை தொடரும் என்பது. இந்த சரத்துக்கு எதிராக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், திரிபுராவில் ஆடு கோழி பலியிடுவதற்கு தடை விதித்திருக்கிறது.

    உச்சநீதிமன்றத்தில் அப்பீல்

    உச்சநீதிமன்றத்தில் அப்பீல்

    இதனால் திரிபுராவில் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. அங்கு ஆளும் பாஜக அரசுக்கு இதனால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியா- திரிபுரா இணைப்பு ஒப்பந்தத்தை முன்வைத்து உச்சநீதிமன்றத்துக்குப் போகிறது திரிபுரா மாநில அரசு.

    English summary
    NoW Tripura also joined the Controversy of Animal Sacrifice issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X