சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விஞ்ஞானி தெர்மாகோல் ராஜுவுக்கு வயதாகிவிட்டது… நடிகை குஷ்பு பதிலடி

Google Oneindia Tamil News

Recommended Video

    செல்லூர் ராஜுவுக்கு நடிகை குஷ்பு பதிலடி- வீடியோ

    சென்னை: தம்மைப் பற்றி செல்லூர் ராஜு தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.

    வருகிற 18ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அவரவர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அதே நேரத்தில், ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அரசியலைத் தாண்டி தனிமனித விமர்சனமாகவும் அமைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது,

    அவங்கள பாருங்க.. என்னையும் பாருங்க.. நீங்களே முடிவு பண்ணுங்க.. நாம் தமிழர் வேட்பாளர் பிரச்சாரம்அவங்கள பாருங்க.. என்னையும் பாருங்க.. நீங்களே முடிவு பண்ணுங்க.. நாம் தமிழர் வேட்பாளர் பிரச்சாரம்

    குஷ்பு பிரச்சாரம்

    குஷ்பு பிரச்சாரம்

    காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு, தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து இரு தினங்களுக்கு முன் உசிலம்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவரை காணவும், அவரது பேச்சை கேட்கவும் ஏராளமானோர் கூடினர்.

    செல்லூர் ராஜு விமர்சனம்

    செல்லூர் ராஜு விமர்சனம்

    இது பற்றி பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, வைகை ஆற்றில் எருமை மாட்டைக் குளிப்பாட்டினால் கூட, கூட்டம் கூடும் என்றும் குஷ்பூ இளமை வயதில் தொட்டால் சிவக்கும் அழகில் இருந்தார். அப்போது குஷ்புவுக்கு கோவில் கட்டினார்கள். தற்போது அவருக்கு வயதாகி விட்டது. நடிகர்-நடிகைகளை பார்க்க கூடும் கூட்டம், எல்லாம் வாக்காக மாறிவிடாது என்றும் விமர்சனம் செய்தார்.

    குஷ்பு பதிலடி

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டுவிட்டரில் பதில் அளித்துள்ளார் நடிகை குஷ்பு. அதில், நம்ம அதிமுக விஞ்ஞானி தெர்மாகோல் ராஜுவுக்கு வயதாகிவிட்டது என்பது நல்லா தெரியுது என்றும் பாவம் என்னென்னவோ பேசிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்

    நன்றிக்கடன் பட்டுள்ளேன்

    நன்றிக்கடன் பட்டுள்ளேன்

    எனக்காக கூடும் கூட்டத்தை, அதிமுக சேர்ந்தவர்கள் கவனித்து வருவதற்கு நன்றி என்றும், 30 ஆண்டுகளைக் கடந்தும், இவ்வளவு கூட்டம் கூடுகிறது என்றால், உண்மையிலேயே தமிழக மக்களுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Kushbusunder twit: Even after 30yrs if I am able to do that, truly indebted to the peoples of TN
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X