சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் இருந்து மலேசியாவுக்கு போதை மாத்திரை கடத்த முயற்சி.. 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இருந்து மலேசியாவிற்கு போதை மாத்திரை கடத்த முயன்ற வழக்கில் 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு போதை மாத்திரை கடத்த முயன்ற சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த முகமது அலி(வயது 51), பழவந்தாங்கலைச் சேர்ந்த இம்ரான்கான்(33), சிவகங்கை மாவட்ட இளையான்குடியைச் சேர்ந்த நூருல் அமீன்(23) ஆகியோரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

Trying to smuggle drug pills from Chennai to Malaysia 3 sentenced to 10 years in prison

இந்த வழக்கு விசாரணை சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட முகமது அலி உள்பட 3 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், மொத்தம் 7 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

English summary
Trying to smuggle drug pills from Chennai to Malaysia, 3 sentenced to 10 years in prison: chennai Special Court verdict.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X