சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது ஜனநாயகத்துக்கு செய்யும் துரோகம்.. போராடும் மாணவர்களுக்காக கொதிக்கும் தமிழச்சி தங்கபாண்டியன்

Google Oneindia Tamil News

சென்னை: போராட்டம் நடத்தும் மாணவர்களின் குரல்களை ஒடுக்க நினைப்பது ஜனநாயகத்துக்கு செய்யப்படும் துரோகம் என திமுக எம்பி தமிழச்சி தங்க பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இன்று (22.12.2019) காலை, பெசன்ட் நகர் - எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்ற "Let's Run Chennai 2019" பெண்கள் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு குறித்த (To Support Women Empowerment) மாரத்தான் போட்டியில் சிறப்பு விருந்தினராக திமுக எம்பி தமிழச்சி தங்க பாண்டியன் பங்கேற்றார். இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துப் பரிசுகளையும் வழங்கினார்.

Trying to suppress the voice of struggling students is a betrayal of democracy: says thamizhachi thangapandian

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், குடியுரிமை திருத்த சட்டம் போராட்டங்கள் குறித்து பேசுகையில், போராட்டம் நடத்தும் மாணவர்களின் குரல்களை ஒடுக்க நினைப்பது ஜனநாயகத்துக்கு செய்யப்படும் துரோகம் என்று விமர்சித்தார்.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வேண்டும் என்று அதிமுக மத்திய அரசிடம் கோரிக்கை எழுப்பி இருக்கிறதே என்ற கேள்விக்கு, இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் இந்திய குடியுரிமை வேண்டும் என்பதே திமுக-வின் நிலைப்பாடு என்று தமிழச்சி தங்க பாண்டியன் தெரிவித்தார்.

English summary
DMK MP Thamizhachi thangapandian says Trying to suppress the voice of struggling students is a betrayal of democracy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X