சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது போட்டியிட ஆளே இல்லையா.. 24 வேட்பாளர்களை அறிவித்து அதிமுகவுக்கு பதிலடி கொடுத்த தினகரன்

Google Oneindia Tamil News

சென்னை: அமமுகவில் 40 மக்களவை தொகுதிகளுக்கும் போட்டியிட ஆளே இல்லை என கிண்டல் செய்த அதிமுகவுக்கு பதிலடியாக 24 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து ஷாக் கொடுத்துள்ளார் தினகரன்.

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததிலிருந்து தினகரன் ஓரங்கட்டப்பட்டார். இதையடுத்து அதிமுகவை மீட்கும் முயற்சிகளில் இறங்கி தோல்வி அடைந்த அவர் தனக்கென தனி ரூட்டை உருவாக்கிக்க கொண்டார்.

ஆர் கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் அதிமுக, திமுகவை விட அதிக அளவிலான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியோ பிரபல கட்சியோ தான் வெற்றி பெறும் என்ற ஃபார்முலாவை உடைத்தார்.

பாதி பேர் பெயரை காணோம்.. வாய்ப்பு பெறாத முக்கிய தலைகள்.. டிடிவியின் அசத்தல் திட்டம் என்ன? பாதி பேர் பெயரை காணோம்.. வாய்ப்பு பெறாத முக்கிய தலைகள்.. டிடிவியின் அசத்தல் திட்டம் என்ன?

சின்னம்

சின்னம்

இதைத் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற ஒரு அரசியல் அமைப்பை அவர் தொடங்கினார். திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது குக்கர் சின்னம் கோரி மனு அளித்தார். எனினும் அவருக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது.

மாற்று கட்சி

மாற்று கட்சி

இந்த நிலையில் தினகரனின் வலது கரமாக செயல்பட்ட கரூர் செந்தில் பாலாஜி அவரிடம் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இதையடுத்து தங்கதமிழ்ச் செல்வனும் இணைய உள்ளதாக தகவல்கள் கூறின. ஆனால் பாலாஜியை தவிர்த்து வேறு எந்த முக்கிய தலைகளும் மாற்றுக் கட்சிக்கு செல்லவில்லை.

தினகரன்

தினகரன்

லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட போது தினகரன் தனது நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் ஒரு பேட்டியில் பேசிய அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், விரைவில் தினகரனிடம் உள்ளவர்கள் எங்கள் பக்கம் தாவுவர்.

தினகரன் தனித்து போட்டி

தினகரன் தனித்து போட்டி

மக்களவை தேர்தலில் போட்டியிட கூட தினகரனிடம் ஆட்கள் இல்லை என்று தகவல்கள் கிடைத்துள்ளதாக ஏளனம் செய்தாா். இதையடுத்து தினகரன் தனித்து போட்டி என அறிவித்தார். 39 தொகுதிகளில் 38 தொகுதிகளுக்கு போட்டியிடுவதாகவும் அறிவித்தார்.

கெத்து காட்டிய தினகரன்

கெத்து காட்டிய தினகரன்

38 தொகுதிகளில் 24 தொகுதிகளுக்கு இன்று வேட்பாளர்களை அறிவித்தார். அதுபோல் 18 சட்டசபை இடைத்தேர்தலிலும் 9 வேட்பாளர்களை அறிவித்துள்ளார். மீதமுள்ள தொகுதிகளுக்கு இன்று மாலை அறிவிக்கப்படும் என்றும் தினகரன் கூறியுள்ளார். ஆளே இல்லை என கூறிய அதிமுகவுக்கு பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளுக்க வேட்பாளர்களை அறிவித்து கெத்து காட்டியுள்ளார் தினகரன்.

English summary
TTK Dinakaran announces candidates list for Loksabha and Assembly byelection. It is a suitable relpy given to ADMK who teases him that his party had no members to contest 40 LS constituencies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X