சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தை கேட்காமல் ஆக்சிஜனை வெளிமாநிலத்துக்கு கொடுப்பதா.. மத்திய அரசை வறுக்கும் டி.டி.வி தினகரன்!

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசு, தமிழகத்துக்கு வேண்டிய ஆக்சிஜனை தமிழக அரசிடம் அனுமதி பெறாமல் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு அனுப்பி வைத்ததற்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    சென்னை: ஆக்சிஜன் சப்ளை…. மத்திய அரசிடம் முறையீடு…. அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

    தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

    ஆக்சிஜன் தட்டுப்பாடு.. நோயாளிகளை வெளியேற்றும் மருத்துவமனைகள்.. இந்த அவலம் எங்க தெரியுமா? ஆக்சிஜன் தட்டுப்பாடு.. நோயாளிகளை வெளியேற்றும் மருத்துவமனைகள்.. இந்த அவலம் எங்க தெரியுமா?

    தமிழகத்தில் பாதிப்பு

    தமிழகத்தில் பாதிப்பு

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிவேகத்தில் பரவி வருகிறது. தினமும் 10,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு நகரங்களில் பாதிப்பு அதிகரித்து வருகின்றன. கொரோனவை தடுக்கும் வகையில் தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 4 வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

    மத்திய அரசின் வேண்டாத செயல்

    மத்திய அரசின் வேண்டாத செயல்

    இந்த நிலையில் நாட்டில் பெரும்பாலான மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நிலைமை இப்படி இருக்க மத்திய அரசு, தமிழகத்துக்கு வேண்டிய ஆக்சிஜனை தமிழக அரசிடம் அனுமதி பெறாமல் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் இது தொடர்பாக மத்திய அரசிடம் தெரிவிக்கப்படும் என்றார்.

    டி.டி.வி தினகரன் கண்டனம்

    மத்திய அரசின் இந்த செயலுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதேபோல் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- தமிழக மக்களுக்கு ஆக்சிஜன் தேவை இருக்கும்போது தமிழக அரசு நிர்வாகத்தைக் கலந்து ஆலோசிக்காமல் வெளிமாநிலங்களுக்கு ஆக்ஸிஜனை அனுப்பும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது. இத்தகைய செயலினை எந்தக் காரணத்திற்காகவும் ஏற்க முடியாது.

    பொறுப்பை மறந்து விடாதீர்கள்

    பொறுப்பை மறந்து விடாதீர்கள்

    தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. அதேபோல் கொரோனா தடுப்பூசியின் விலையை அவரவர் இஷ்டம்போல நிர்ணயிப்பதையும் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என்று டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

    English summary
    AMMK General Secretary TTV Dinakaran has condemned the Central Government for sending oxygen to Tamil Nadu without the permission of the Tamil Nadu Government to the states of Andhra Pradesh and Karnataka
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X