சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் 41 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி.. தினகரன் கடும் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 41 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை பாலைவனமாக்கும் திட்டங்களை அமமுக ஒருபோதும் ஏற்காது என்று தினகரன் எச்சரித்துள்ளார்.

மேலும் மத்திய அரசு இதற்காக அளித்த அனுமதியையும் உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் கட்சியாகிறது அமமுக.. தேர்தல் ஆணையத்தில் தினகரன் தரப்பு முறைப்படி விண்ணப்பம் அரசியல் கட்சியாகிறது அமமுக.. தேர்தல் ஆணையத்தில் தினகரன் தரப்பு முறைப்படி விண்ணப்பம்

தினகரன் கண்டனம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியருப்பதாவது: "தமிழகத்தில் காவிரி டெல்டா உள்பட 41 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது இந்த அனுமதியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கேட்டுக்கொள்கிறது,.

வாய் திறக்காமல் மவுனம்

வாய் திறக்காமல் மவுனம்

நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் 67 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கேட்டிருந்தது. முன்பே இதுகுறித்து செய்திகள் வெளியான நிலையில், மக்கள் விரோத மத்திய அரசும், அதற்கு அடிமை சேவகம் புரிகிற பழனிச்சாமி அரசும் வாய் திறக்காமல் இருந்தனர்.

தேர்தல் முடிந்த உடன்

தேர்தல் முடிந்த உடன்

இப்போது தேர்தல் முடிந்தவுடன் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 41 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைப்பது குறித்து ஆய்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருப்பது வண்மையாக கண்டிக்கத்தக்கது.

தண்ணர் விட மறுப்பு

தண்ணர் விட மறுப்பு

ஒரு பக்கம் தமிழகத்திற்கு ஒரு சொட்டு காவிரி தண்ணீர் கூட வரவிடாமல் தடுக்கும் மேக்கேதாட்டூ அணைக்கு அனுமதி அளித்திருக்கிற மத்திய அரசு, இன்னொரு புறம் தமிழகத்தைப் பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் விடாப்பிடியாக நிற்கிறது.

அரசுக்கு கோரிக்கை

அரசுக்கு கோரிக்கை

சோமாலியா நாட்டைப் போல் தமிழகத்தை மாற்றுவதற்கு துடிக்கிற இவர்களின் திட்டங்களை ஒருபோதும் இந்த மண்ணில் அனுமதிக்க முடியாது. இதற்கான ஆய்வுகள் மேற்கொள்ப்படுவதை பழனிச்சாமி அரசு உறுதியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

தினகரன் எச்சரிக்கை

தினகரன் எச்சரிக்கை

இது தொடர்பாக ஓ.என்.ஜி.சி. உட்பட எந்த நிறுவனத்திற்கும் மாநில அரசின் சார்பில் அனுமதி அளிக்கக்கூடாது. அதை மீறி செயல்படுத்த துடித்தால் மக்கள் சக்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.

மக்களுக்கு துணை

மக்களுக்கு துணை

நம்முடைய வாழ்க்கை முறையான விவசாயத்தை அழித்து. தமிழகத்தை பாலைவனமாக்கும் இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்துவதை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு போதும் ஏற்காது. பாதிக்கப்படும் மக்களோடு எப்போதும் நாங்கள் துணை நிற்போம்." இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

English summary
Ammk general secretary ttv dinakaran condemns center over allowed to hitro corban in 41 place in tamilnadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X