சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சசிகலா எப்போது வேண்டுமானாலும் வரலாம்.. இதுதான் சரியாக இருக்கும்.. தினகரன் முடிவிற்கு காரணம் என்ன?

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் பதிவு செய்ய முடிவெடுத்ததற்கு பின் நிறைய திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அரசியல் கட்சியாக மாறும் அமமுக: பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்- வீடியோ

    சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் பதிவு செய்ய முடிவெடுத்ததற்கு பின் நிறைய திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

    அவர்கள் வைத்து இருப்பது கட்சி கிடையாது.. அதை பதிவு செய்யவில்லை.. அதனால் அவர்களுக்கு நிரந்தர சின்னம் வழங்க முடியாது என்று குக்கர் சின்னம் வழக்கில் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டு இருந்தது. அதன்பின் பரிசுப் பெட்டி சின்னம் பெற்று லோக்சபா தேர்தலில் அமமுக வேட்பாளர்கள் சுயேட்சையாக நின்றார்கள்.

    அதிமுகவை முழுமையாக கைப்பற்றும் வரை விட மாட்டேன் என்ற சபதத்துடன்தான் டிடிவி தினகரன் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில்தான் புதிய திருப்பமாக அவர் அமமுக கட்சியை பதிவு செய்யும் முடிவை எடுத்துள்ளார்.

    ரொம்ப கோவக்காரரோ.. பாஜகவிற்கு கை தவறி வாக்களித்த இளைஞர்.. விரக்தியில் விரலை வெட்டிக்கொண்ட கொடூரம் ரொம்ப கோவக்காரரோ.. பாஜகவிற்கு கை தவறி வாக்களித்த இளைஞர்.. விரக்தியில் விரலை வெட்டிக்கொண்ட கொடூரம்

    திடீர் முடிவு

    திடீர் முடிவு

    அமமுகவில் உள்ள முக்கிய உறுப்பினர்கள் பலருக்கே டிடிவி தினகரன் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று தெரியாது என்கிறார்கள். ஆனால் டிடிவி தினகரன் இந்த திட்டத்தை பல நாட்களாக மனதில் வைத்து இருந்தார். தேர்தலுக்கு பின் இதை செயல்படுத்தலாம் என்று இருந்தார். தற்போது சரியாக தேர்தலுக்கு பின் கட்சி அறிவிப்பை கையில் எடுத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

    சசிகலா வருகிறார்

    சசிகலா வருகிறார்

    சொத்துகுவிப்பு வழக்கில் தற்போது சசிகலா சிறையில் இருக்கிறார். அவர் இரண்டு வருடமாக சிறையில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் அவருக்கு பெயில் கிடைக்கும் என்கிறார்கள். அடுத்த மாதமே கூட சசிகலா பெயில் பெற வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடக்கும் பட்சத்தில், தங்களுக்கு என்று ஒரு தனிக் கட்சி இருப்பதே சரியாக இருக்கும் என்று டிடிவி தினகரன் முடிவெடுத்து இருப்பதாக கூறுகிறார்கள்.

    அதிமுக கூட்டணி

    அதிமுக கூட்டணி

    அதேபோல் சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக அதிக இடங்களை வெல்லாமல் ஆட்சி கவிழும் சூழ்நிலை உருவானால் டிடிவி ஆதரவு அளிக்க கூட வாய்ப்புள்ளது. அப்போது சசிகலா விடுதலை குறித்த கோரிக்கையை வைக்கலாம். முதல்வர் மட்டும் மாற்றப்படலாம் என்று கூறுகிறார்கள். இதை மனதில் வைத்து தனது கட்சியை பதிவு செய்ய டிடிவி முடிவு செய்துள்ளார் என்றும் கூறுகிறார்கள்.

    பலம்

    பலம்

    அதேபோல் லோக்சபா தேர்தலில் அமமுக சிறப்பாக செயல்பட்டதாக அவருக்கு தொண்டர்களிடம் இருந்து ரிப்போர்ட் சென்று இருக்கிறது. சில இடங்களில் வெற்றியும், சில இடங்களில் இரண்டு அல்லது மூன்றாவது இடமும் அமமுக பெறும் என்று கூறி இருக்கிறார்கள். இதனால் கட்சியாக பதிவு செய்தால், தனியாகவே சிறப்பாக செயல்படலாம், வலுவாக இருக்கலாம் என்று டிடிவி நினைப்பதாக கூறுகிறார்கள்.

    என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்

    என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்

    இந்த லோக்சபா தேர்தலுக்கு பின் தேசிய அரசியலிலும், மாநில அரசியலிலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சமயங்களில் அதிமுகவின் மிகப்பெரிய வீழ்ச்சியாக அல்லது எழுச்சியாக கூட இது இருக்கலாம். அதனால் நமக்கு என்று தனியாக கட்சி இருப்பதே சிறந்தது என்று டிடிவி தினகரன் நினைக்கிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள். இவரின் முடிவு ஏன் எடுக்கப்பட்டது, அந்த முடிவு சரியா என்பது மே 23க்கு பிறகே தெரிய வரும்.

    English summary
    TTV Dinakaran has a huge plan behind registering his party AMMK in ECI.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X