சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தா.பாண்டியன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்!

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன் , திருமாவளவன், கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

    சென்னை: காலமானார் தோழர் தா. பாண்டியன்…அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல்!

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யு.மான தா.பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

    ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

    துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், தா.பாண்டியன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு வேதனை அடைந்ததாகவும், அவரது குடும்பத்தாருக்கும், அவர் சார்ந்த கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

    பாமக நிறுவனர் ராமதாஸ்

    பாமக நிறுவனர் ராமதாஸ்

    பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், " இந்திய பொதுவுடமைக் கட்சியின் முன்னாள் மாநில செயலாளரும், தலைசிறந்த பேச்சாளருமான தா. பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.நாடு போற்றிய பொதுவுடைமைத் தலைவர்களில் ஒருவரான ஜீவா அவர்களின் அன்பைப் பெற்றவரான தா. பாண்டியன், இளம் வயதிலிருந்தே பொதுவுடமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றி வந்திருக்கிறார்.

    பேரிழப்பு

    பேரிழப்பு

    இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களுடனும், நல்லக்கண்ணு உள்ளிட்ட தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களுடனும் இணைந்து அரசியல் பணியாற்றியவர். கடந்த பல ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, அதைப் பொருட்படுத்தாமல் இயக்கப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அவரது மறைவு தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும்.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன்

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பெரியவர் தா.பாண்டியன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.அவர், சிறந்த இடதுசாரி சிந்தனைவாதியாகவும், மக்களை ஈர்த்த பேச்சாளராகவும், கருத்தாழமிக்க எழுத்தாளராகவும் திகழ்ந்த பன்முக ஆற்றலாளர். அரசியல் களத்தில் மனதில் பட்டதை துணிச்சலாக பேசியும், செயல்பட்டும் வந்தவர்.தா.பாண்டியன் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கம்யூனிஸ்ட் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.

    திருமாவளவன்

    திருமாவளவன்

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. அவரது இரங்கல் செய்தியில், "முற்போக்கு சிந்தாந்த தளத்தில் தா.பாண்டியன் அவர்களின் பங்களிப்பு மகத்தானது. அவரது மறைவு ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்திற்கும் நேர்ந்த பேரிழப்பாகும். ஈழத் தமிழர்களின் நலன்களில் அக்கறையோடு பணியாற்றியவர். அவருக்கு எமது வீரவணக்கம். உலக அறிந்த இடங்களில் தமிழ் வளர்ச்சி உயர்த்திப் பேசியவர். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட பொழுது அவருடன் இணைந்து தேர்தலில் பிரச்சாரங்களில் பங்கேற்றது எனக்கு நினைவிற்கு வருகின்றன.

    இரங்கல் தெரிவிக்கிறேன்

    இரங்கல் தெரிவிக்கிறேன்

    சாதாரண மக்களுக்கு உரியதான தலைவர் தா பாண்டியன் இழப்பு ஈடுசெய்ய முடியாத அளவுக்கு பேரிழப்பு என்று தெரிவித்துள்ளார். தா. பாண்டியன் அவர்களை இழந்து வாடும் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தோழர்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், "பொதுவுடைமைத் தூணொன்று சாய்ந்தது. பற்பல விழுதுகள் பாய்ச்சிவிட்டு கம்யூனிஸ வேரொன்று வீழ்ந்திருக்கிறது. தோழர் தா.பாண்டியன் மறைவு தமிழர்கள் அனைவருக்குமே பொது இழப்பு" என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    TTV Dinakaran has expressed condolences over the death of D. Pandian senior leader of the Communist Party of India
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X