சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தினகரன் செம பிளான்.. சும்மா காய் நகர்த்தவில்லை.. வெட்டியாகவும் கட்சி ஆரம்பிக்கலை!

அமமுகவை கட்சியாக உயர்த்தி அதன் பொதுச்செயலாளராகவும் உயர்ந்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அரசியல் கட்சியாக மாறும் அமமுக: பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்- வீடியோ

    சென்னை: இப்போதைக்கு இருக்கும் அரசியல்வாதிகளிலேயே பக்காவாக பிளான் செய்து காய் நகர்த்தி முதிர்ச்சி தன்மையை காட்டி வருவது யார் என்றால் டிடிவி தினகரன் என்றே சொல்லலாம்!

    ஆர்ப்பாட்டம் இல்லாமல், படபடவென உளறி கொட்டும் தன்மையோ, உணர்ச்சிவசப்பட்டு தரம் தாழ்ந்து பேசுவதோ, சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது பேசி மாட்டி கொள்வதோ.. இது எதுவுமே இல்லை! எதையும் பொறுமையாக அணுகும் முறையும், அதை வெளிப்படுத்தும் விதமும் அவரது அரசியல் பக்குவம், நாகரீகத்தை வெளிப்படுத்தி வருகிறது.

    இப்போது, அமமுக என்ற அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்து, அதன் பொதுச்செயலாளராகவும் மாறி உள்ளார் டிடிவி தினகரன்! தினகரன் இப்படி ஒரு முடிவு எடுக்க என்ன காரணம்? தேர்தலுக்கு முன்பு செய்ய வேண்டிய ஒரு விஷயத்தை தேர்தல் முடிந்த பிறகு அதுவும் மறுநாளே இதை செய்ய என்ன காரணம்?

    பிளஸ் 2 தேர்வில் அசத்திய சென்னை மாநகராட்சி பள்ளிகள்.. 4 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பிளஸ் 2 தேர்வில் அசத்திய சென்னை மாநகராட்சி பள்ளிகள்.. 4 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

    தொப்பி, குக்கர்

    தொப்பி, குக்கர்

    முதலாவதாக, அமமுகவுக்கு ஒரு மானப்பிரச்சனை! சொந்தமாக ஒரு கட்சி என்ற அங்கீகாரம் கூட இல்லாத காரணத்தினால் சின்னம் பிரச்சனை சின்னா பின்னமாக்கி விட்டது. சுப்ரீம் வரைபோய் வந்தும் காயங்களை மறக்க முடியவில்லை. தொடர்ந்து தேர்தல் ஆணையம் குக்கர், தொப்பிகளில் செய்த சம்பவங்கள் மேலும் எரிகிற தீயில் எண்ணையை ஊற்றியது. அதனால் அங்கீகாரம் என்பது முதல் தேவையாக அமமுகவுக்கு உள்ளது!

    தனி சின்னம்

    தனி சின்னம்

    இரண்டாவதாக, தினகரன் அணி வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் தனிச் சின்னம் ஒதுக்க மறுத்து, பின்னர் பரிசுப்பெட்டி சின்னம் வழங்கியது. இதனால் வேட்பாளர்கள் எல்லாருமே "சுயேட்சை" என்ற விஷயத்தில் அடங்கி போய் போட்டியிட்டனர். அவர்கள் வெற்றி பெற்றாலும் சுயேட்சைகளே!

    பலம் கூடும்

    பலம் கூடும்

    மூன்றாவதாக, நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அமமுக ஓரளவு செல்வாக்கை பெறும் என்று முந்தைய கருத்து கணிப்புகள் கூறின. அதாவது குறைந்தது 5 இடங்களையாவது அமுமக பெறும் என்று அந்த கணிப்பில் சொல்லப்பட்டது. ஒருவேளை பெரும்பான்மையுடன் அமமுக இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், இப்போது தொடங்கி உள்ள கட்சி அதற்கு வேராக இருக்கும்.. ஆதாரமாக விளங்கும்.. பலத்தை கூட்டும்!

    வாக்கு சதவீதம்

    வாக்கு சதவீதம்

    நான்காவதாக, தனித்து போட்டி என்று தினகரன் அறிவித்தும் எஸ்டிபிஐ தவிர யாரும் அவருடன் கூட்டணி வைக்க போகவில்லை. ஆனால் இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை பிடித்து, அதன்மூலம் கட்சியை பலமாக வைத்திருந்தால், பிற கட்சிகள் தங்களை தேடி வருவதற்கான சூழலை உருவாக்குகிறார் தினகரன்!

    அதிமுக

    அதிமுக

    ஐந்தாவதாக, இப்படி ஒரு கட்சியை வளர்ப்பது, கிட்டத்தட்ட அதிமுகவுக்கு ஆப்பு அடிப்பது போலதான். ஆர்கேநகர் தேர்தல் வெற்றிக்கு பிறகு எத்தனையோ பேர் அதிமுகவில் இருந்து அமமுகவுக்கு தாவினார்கள். அதுபோல வரப்போகிற தேர்தல் முடிவுகள் மூலம் எத்தனை பேர் தினகரன் பக்கம் சாய உள்ளார்களோ தெரியாது. அதற்கான வேலைகளும் நடந்து வருகிறதா என்றும் உறுதியாக தெரியவில்லை. எப்படி பார்த்தாலும் தேர்தல் முடிவுகளை வைத்து இப்போதைய அதிமுக அதிருப்திகள் நாளைக்கு அமமுகவில் இணையவும் வாய்ப்பு உள்ளது.

    மறைமுக விருப்பம்

    மறைமுக விருப்பம்

    ஆறாவதாக, ஒருவேளை தினகரனுடன் அதிமுக இணக்கமாகும் சூழல் வந்தால், அதிமுக-அமமுகவும் ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படலாம். இது இரு கட்சியில் உள்ள பலரது மறைமுக விருப்பமாக உள்ளது!

    சசிகலா

    சசிகலா

    ஏழாவதாக, அதிமுக மீது உரிமை கோரும் வழக்கை சசிகலா நடத்த இருப்பதாக ஒருமுறை அவர் டிவி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதனால் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படும் சசிகலா, விரைவில் சிறையில் இருந்து ரிலீஸாகி அதிமுக- வை உரிமை கோரும் வழக்கை தொடர்ந்து நடத்தவும் வாய்ப்பு உள்ளது.

    எதிர்காலம்

    எதிர்காலம்

    எப்படி எப்படியோ, கூட்டி கழித்து பார்த்தாலும் தினகரனின் மாஸ்டர் பிளான் பின்னால் தமிழக அரசியலின் எதிர்காலம் ஏதோ ஒன்றில் இணைந்துள்ளதாகவே தெரிகிறது!

    English summary
    TTV Dinakaran Registered AMMK as a Political Party and has selected as General Secretary
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X