சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு.. முக்கிய ஆலோசனை!

சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் அமமுக தலைவர் டிடிவி தினகரன் திடீர் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் அமமுக தலைவர் டிடிவி தினகரன் திடீர் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களுக்கு முடிவடைந்துவிட்டது.

TTV Dinakaran holds an important meeting with disqualified MLAs in his residence

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கையில்லை என்று தினகரனுக்கு ஆதரவான 18 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் மனு அளித்தனர். இதனால் கொறடா மூலம் இவர்கள், எல்லோரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள்.

இதற்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து முடிந்து தீர்ப்பிற்காக காத்திருக்கிறது. இந்த மாத இறுதியில் இல்லை அடுத்த மாத தொடக்கத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த பரபரப்பான கட்டத்தில் தனது ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார். தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் சில முன்னாள் அதிமுக உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து இதில் விவாதம் செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் இதில் இவர்கள் பேசி இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

ஜப்பானிலும் ஒரு ஜப்பானிலும் ஒரு "சபரிமலை" .. கயிற்றில் ஏறி, கரடுமுரடான மலைகளை கடந்து செல்லும் ஆண்கள் கோயில்!

திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்று இருக்கிறது. இந்த கூட்டத்தில் இந்த மூன்று விஷயங்கள் குறித்து தினகரன் ஆதரவாளர்கள் ஆலோசித்து இருக்கிறார்கள்.

English summary
TTV Dinakaran holds an important meeting with disqualified MLAs in his residence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X