சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆர்கே நகர் தேர்தல் முடிவு... அதிமுக கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கணும்... டிடிவி தினகரன் அசால்ட்

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக-வுக்கு சவால் விடும் டிடிவி தினகரன்- வீடியோ

    மதுரை: ஆர்கே நகர் தேர்தல் முடிவுதான் வரும் லோக்சபா தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்து பேசினார். அப்போது டிடிவி தினகரன் கூறியதாவது:விமானி அபிநந்தன் மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பாகிஸ்தான் மீதான தாக்குதலில் 300 பேரை கொன்றது குறித்த ஆதாரம் இதுவரை வெளியிடப்படவில்லை.

    புல்வாமா போன்ற நிகழ்வுகள் மத்திய அரசின் திட்டமிட்ட சதியா, இயற்கையானதா என்று பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது. சமூகவலை தளங்களில் எழுப்பபடும் கேள்விகளும் அதையே கூறுகின்றன.

    அரசியல் நிலைப்பாட்டை கூறினேன்.. இனி விஜயகாந்த்தான் முடிவெடுக்க வேண்டும்.. சரத்குமார் சூசக பேட்டி!அரசியல் நிலைப்பாட்டை கூறினேன்.. இனி விஜயகாந்த்தான் முடிவெடுக்க வேண்டும்.. சரத்குமார் சூசக பேட்டி!

    பழி வாங்கும் மத்திய அரசு

    பழி வாங்கும் மத்திய அரசு

    எதிர்க்கட்சிகள், பிடிக்காதவர்களை மிரட்டி , ஆணையங்கள் மூலமாக சோதனை நடத்தி மத்திய அரசு பழி வாங்குகிறது. சுதந்திரத்திற்கு பின் இருந்த அரசுகளை விட தற்போதைய மத்திய அரசு பழி வாங்குதல் நடவடிக்கையை அதிகமாக கையாள்கிறது. இதற்கு இந்திய மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    330 பேர் மட்டுமே உள்ளனர்

    330 பேர் மட்டுமே உள்ளனர்

    மோடிக்கு பின்னால் தமிழக மக்கள் இல்லை. ஈபிஎஸ் உள்ளிட்ட 330 பேர் மட்டுமே உள்ளனர். கடந்த கால அனுபவங்களில் மத்திய அரசுகளால் தமிழகத்திற்கு உதவும் கிடைக்கவில்லை.

    திமுக கண்டுகொள்ளவில்லை

    திமுக கண்டுகொள்ளவில்லை

    பதவியை காப்பாற்றி கொள்வதற்காக ஈழ தமிழர்கள் மீதான தாக்குதல் குறித்து திமுக கண்டுகொள்ள வில்லை. தமிழக மக்கள் தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்க வில்லை என்பதற்காக தமிழகம் இந்தியாவில் தான் உள்ளது என்ற நிலையை மறந்து மத்திய அரசுகள் செயல்பட்டுவருகிறது.

    தமிழகத்தின் உரிமைகள்

    தமிழகத்தின் உரிமைகள்

    அதனால் மாநில கட்சிகள் தனியாக நின்று வெற்றி பெற்று தமிழகத்தின் உரிமைகளை கேட்டுபெறும் நிலையை உருவாக்க வேண்டும். நன்றி, விசுவாசமான அதிமுக தொண்டர்கள் 95 சதவீதம் பேர் எங்களிடம் உள்ளனர்.

    தனித்துதான் போட்டி

    தனித்துதான் போட்டி

    பாஜக, பாமக ஆகிய ஜெயலலிதா விரும்பாத கட்சிகளோடு அதிமுக கூட்டணி வைத்துள்ளது. நாங்கள் தனித்து தான் போட்டியிட உள்ளோம். நிச்சயம் வெற்றி பெறுவோம்.

    லோக்சபா தேர்தல் முடிவு

    லோக்சபா தேர்தல் முடிவு

    ஊடகவியலாளர் பார்வையில் நாங்கள் சின்ன கட்சியாக இருந்தாலும் விரலுக்கேத்த வீக்கமாக நாங்கள் சின்ன கட்சிகளோடு கூட்டணி அமைத்துள்ளோம். ஆர்.கே.நகர் முடிவு தான் லோக்சபா தேர்தலிலும் பிரதிபலிக்கும்.

    கூட்டணியின் நிலைமை

    கூட்டணியின் நிலைமை

    அமமுக வெற்றி பெறும். கூட்டணிகளை பார்த்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். கூட்டணியில் உள்ள கட்சிகளின் பலன் என்னவென்று தெரியும். கடந்த காலங்களில் அவர்களுடையை கூட்டணியின் நிலை என்ன ஆனது என மக்களுக்கு புரியும். தமிழகத்தின் முதல் அணி அமமுகதான் என்று கூறினார்.

    English summary
    TTV Dinakaran hoped that the AMMK party will win Lok Sabha elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X