• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"மாஸ்டர்" தினகரன்.. "புள்ளிகளை" தட்டி தூக்கும் ஸ்டிரேட்டஜி.. ரிசல்ட்டுக்கு பிறகு வேற லெவல் பிளான்

|

சென்னை: தமிழக அரசியலில் அமமுகவின் டிடிவி தினகரன் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுப்பார் என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து சொல்ல தொடங்கி உள்ளனர்.. அதற்கு என்ன காரணம்? இது சாத்தியமா?

இந்த முறை தேர்தலில் 5 முனைப்போட்டி என்றாலும், திமுக, அதிமுகவுக்கு அடுத்து, அமமுக 3வது முக்கியத்துவத்தை பெறுகிறது.

ஒருவேளை, சசிகலா களம் இறங்கியிருந்தால், இந்த முறைதேர்தல் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.. அதாவது சசிகலாவும் திமுகவும் நேரடியாகவே தென்மாநிலங்களில் மோதி கொண்டிருந்திருப்பார்கள்..

சசிகலா

சசிகலா

அதற்கு காரணம் திமுகவை அழிக்க வேண்டும் என்பதே இப்போதுவரை சசிகலாவுக்கு உள்ள ஒரே நோக்கமாகும். அந்த வகையில், திமுகவுடன் நேரடி மோதல் தவிர்க்கப்பட்டுவிட்டது... மாறாக, அதிமுகவை நேருக்கு நேர் சந்தித்து தோற்கடிக்கும் சூழல் உருவானது.. இதற்கு காரணம் டிடிவி தினகரன்தான். ஒருகட்டத்தில், எந்தவித சமரசத்துக்கும் தயார் என்றுதான் அதிமுக பக்கம் வெள்ளைக் கொடியை காட்டினார்..

எடப்பாடியார்

எடப்பாடியார்

ஆனாலும், அவரை எடப்பாடியார் கண்டுகொள்ளவே இல்லை என்பதால்தான், அதிமுகவுடன் மோத துணிந்து செக் வைத்தார்தினகரன்... ஏற்கனவே தென்மண்டலங்களில் அதிமுகவுக்கு பலம் குறைவு என்பதால்தான், அதிமுகவுக்கு எதிராகவே தன்னுடைய வேட்பாளர்களை நிறுத்தினார் தினகரன்.. சில இடங்களில் அதிமுக நிச்சயமாக தோற்கும் என்று தெரிந்தும் வேண்டுமென்றே அந்த தொகுதிகளிலும் அமமுகவின் முக்கிய புள்ளிகளை வேட்பாளராக நிறுத்த துணிந்தார் தினகரன்.

திமுக

திமுக

இதற்கு காரணம், எப்படி இருந்தாலும் திமுகதான் அடுத்த ஆட்சி என்று கணிப்புகள் வெளிவந்து கொண்டிருந்ததால், அதிமுகவுக்கு அவ்வளவாக மவுசு இல்லை என்பதை தினகரன் உணர்ந்து கொண்டார்.. எனவே இந்த முறை அதிமுக தேர்தலில் தோற்றால், அடுத்து நிச்சயம் நம் பக்கம்தான் வரக்கூடும் என்பதில் தினகரன் உறுதியாக இருக்கிறாராம்.. அதனாலேயே திமுகதான் குறி என்பதுபோய், அதிமுகதான் நேரடி குறி என்ற தோற்றம் களத்தில் உருவானது.

 வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு

இப்போது வாக்குப்பதிவுக்கு பிறகு, நிறைய தொகுதிகளில் அதிமுகவின் வாக்குகளை அமமுக டிரான்ஸ்பர் செய்துள்ளதாக கூறப்படுகிறது.. 5.5. வாக்கு சதவீதமானது, இந்த முறை அமமுகவுக்கு 10 வரைகூட உயரலாம் என்றும், தவிர்க்க முடியாத தலைவராக தமிழகத்தில் இனி தினகரன் உருவாவார் என்றும் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்..

 முக்கிய புள்ளிகள்

முக்கிய புள்ளிகள்

அந்த வகையில், ரிசல்ட்டுக்கு பிறகு, ஏராளமான அதிமுக புள்ளிகள் தினகரன் பக்கம் தாவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இணைந்தால், அது அதிமுகவுக்கு மிகப்பெரிய இழுக்காக இருக்கும் என்றும், இது தினகரனின் வெற்றி ஸ்ட்ரேட்டர்ஜி என்றும் கூட சொல்லப்பட வாய்ப்புள்ளதாம்.. மற்றொரு பக்கம், ரிசல்ட்டுக்கு பிறகு சசிகலாவின் என்ட்ரி தவிர்க்க முடியாததாகும் என்கிறார்கள்..

என்ட்ரி

என்ட்ரி

எப்படியும் ஓபிஎஸ் தரப்பு சசிகலாவுடன் இணக்கம் காட்டக்கூடிய முயற்சியை கையில் எடுக்கக்கூடும் என்றும், அப்போது அதிமுக யாருடைய தலைமையின் கீழ் இயங்கும் என்ற விவாதம் மறுபடியும் எழ வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்படுகிறது. இது எல்லாவற்றிற்கும் மேலாக, தினகரன், சசிகலா, ஓபிஎஸ்ஸை வைத்து பாஜக வேறு விதமான கணக்கை போட்டு வருவதாகவும், அப்போது சில காரியங்களை பாஜகவை வைத்து இந்த 3 பேரும் அல்லது இவர்களை வைத்து பாஜகவும் சில காரியங்களை சாதித்து கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சசிகலா

சசிகலா

இப்படி ரிசல்ட்டுக்கு பிறகு எத்தனையோ விதமான யூகங்களும், சந்தேகங்களும் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கின்றன.. ஒருவேளை அதிமுக இந்த முறை தேர்தலில் தோற்றுவிட்டால், பொதுச்செயலாளராக சசிகலா உருவெடுப்பாரா என்ற கேள்வியும் பரவலாக தொத்தி நிற்கிறது...!

English summary
TTV Dinakaran is going to emerge as a powerful leader in Tamilnadu, Say Sources
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X