சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான்தான் அப்பவே சொன்னேனப்பா.. கேக்கலியே.. தினகரன் மீது செம டென்ஷனில் சசிகலா

தினகரன் மீது சசிகலா கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தலில் பெரும் தோல்வி.. தினகரன் மீது டென்ஷனில் சசிகலா- வீடியோ

    சென்னை: பெங்களூர் சிறையில் பெரும் கோபத்தில் இருந்த சசிகலாவை, எப்படியோ இன்று சந்தித்து பேசிவிட்டார் டிடிவி தினகரன்!

    தனிக் கட்சி ஆரம்பிக்காதே என்று படிச்சுப் படிச்சுச் சொன்னேன். கேக்கவே இல்லை. இப்ப பாத்தீங்களா என்று புலம்பியபடி இருக்கிறாராம் சசிகலா. தினகரனின் அமமுகவுக்கு கிடைத்த தோல்வி எதிர்பார்த்ததுதான் என்றும் சசிகலா கூறி வருகிறாராம்.

    லோக்சபா, சட்டசபை இடைத் தேர்தல் பெரும் தோல்வியைத் தொடர்ந்து சசிகலாவை சந்திக்காமல் இருந்த தினகரன் பெங்களூர் சென்று இன்று சந்தித்து பேசி உள்ளார்.

    தினகரன்

    தினகரன்

    சசிகலாவைப் பொறுத்தவரை அதிமுகவை விட்டு விலகுவதில் ஆரம்பத்திலிருந்தே உடன்பாடு இல்லை. சட்ட ரீதியாக அதிமுகவைக் கைப்பற்றும் முயற்சிகளில்தான் அவர் கவனம் செலுத்துமாறு தினகரனிடம் கூறி வந்தார். ஆனால் அவர்தான் அவசரப்பட்டடியே இருந்தார்.

    தனிக்கட்சி

    தனிக்கட்சி

    அமமுக என்ற தனிக் கட்சியை அவர் தொடங்க முடிவு செய்ததும் சசிகலாவுக்கு பிடிக்கவில்லை. இது வேண்டாம் சரி வராது என்று அவர் கூறியதை தினகரன் ஏற்கவில்லையாம். மாறாக சமாதானப்படுத்தவே முயன்றாராாம்.

    இரட்டை அடி

    இரட்டை அடி

    இப்போது சட்டசபை இடைத் தேர்தலிலும் பெரும் தோல்வி, லோக்சபா தேர்தலிலும் பெரும் தோல்வி என இரட்டை அடியை வாங்கிக் கொண்டுள்ளார் தினகரன். இதுதான் சசிகலாவை வேதனைப்படுத்தி விட்டதாம். நான்தான் சொன்னேனே கேக்கவே இல்லை என்று தினகரன் மீது அதிருப்தியாக உள்ளாராம்.

    புகழேந்தி

    புகழேந்தி

    சமீபத்தில் பெங்களூர் புகழேந்தி (இவர் ஓசூர் சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர்) சசிகலாவைப் போய்ப் பார்த்துள்ளார். அப்போது புகழேந்தியிடம் புலம்பித் தள்ளி விட்டாராம் சசிகலா. இந்த நிலையில்தான் அடுத்து தினகரன் சந்திக்கப் போவதாகவும், அவரிடம் சசிகலா தனது ஆதங்கத்தைக் கொட்டுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

    என்ன நடக்க போகுதோ?

    என்ன நடக்க போகுதோ?

    இந்த சந்திப்பின்போது முக்கியமான பல பிரச்சினைகள், விஷயங்கள் குறித்து சசிகலாவும், தினகரனும் ஆலோசிப்பார்கள் என்றும் சொல்லப்பட்டது. அதன்படி, இன்று தினகரன் சிறையில் சசிகலாவை சந்தித்து பேசினார். கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இருவரும் பேசி உள்ளனர்.

    விரைவில் அறிவிப்பு

    விரைவில் அறிவிப்பு

    தேர்தல் முடிவால், அமமுகவில் இருந்து சிலர் கட்சி தாவலிலும் ஈடுபடலாம் என்பதால், அதை எப்படி தடுத்து நிறுத்துவது, அதிருப்தியாளர்களை தக்க வைக்க என்ன மாதிரியான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது குறித்துதான் இருவரும் விவாதித்துள்ளனர். அது சம்பந்தமாக ஒரு சில தினங்களில் பொதுச்செயலாளர் அறிவிப்பார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதனால் அமமுக மட்டுமல்லாமல் அதிமுகவும் பெரும் ஆர்வத்துடன் காத்துள்ளது.

    English summary
    TTV Dinakaran is going to meet Sasikala for the first time after the election defeat. It seems that both of them will be seriously consulted
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X