சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிளான் ஒர்க் அவுட் ஆக ஆரம்பிச்சிருச்சு.. சிறையில் இதைத்தான் சசிகலாவிடம் தினகரன் பேசியிருப்பாரோ!

சிறையில் சசிகலாவை சந்தித்து என்ன பேசினார் டிடிவி தினகரன்?

Google Oneindia Tamil News

Recommended Video

    சசிகலா ஓரம் கட்டப்படுகிறாரா? - தினகரன் விளக்கம்- வீடியோ

    சென்னை: அப்படி என்னதான் சசிகலாவுடன் டிடிவி தினகரன் பேசினாரோ தெரியாது.. கடகடவென அமமுகவில் வேலை ஜரூராக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

    பொதுவாக நெருக்கடியான பிரச்சனை என்றால், அல்லது உடனடியாக ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றால் தினகரன் சட்டுபுட்டுனு பெங்களூருக்கு போய்விடுவார்.

    குழப்பத்துடன் பெங்களூரு செல்லும் தினகரன், சசிகலாவை சந்தித்து பேசிய பிறகு தெளிவாகவும், திடமாகவும் ஊர் திரும்பி வருவார். இதுதான் 2 வருடமாக நடந்து வருகிறது.

    இடைத்தேர்தல் 22-லும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் ஒரே நபர் செந்தில் பாலாஜி- பொன்முடிஇடைத்தேர்தல் 22-லும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் ஒரே நபர் செந்தில் பாலாஜி- பொன்முடி

    அங்கீகாரம்

    அங்கீகாரம்

    சமீபத்தில் தனது அமமுகவுக்கு ஒரு அங்கீகாரம் வேண்டும் என்று நினைத்து தினகரன் அமமுகவை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, இப்போது அந்த கட்சியின் பொதுச்செயலாளராகவும் உள்ளார். ஆனால் சசிகலா பொதுச்செயலாளர் கிடையாதா? அவர் ஓரங்கட்டப்பட்டு விட்டாரா? என்றெல்லாம் எதிர்மற பேச்சுகள் எழ ஆரம்பித்தன.

    சந்திப்பு

    சந்திப்பு

    இந்நிலையில் பெங்களூருக்கு நேற்று புறப்பட்டு சென்றார் தினகரன். தினகரனோடு அமமுகவின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாமக்கல் அன்பழகன், ஜெயா டிவி சிஇஓ விவேக், ராஜராஜன், ஷகிலா, வெங்கடேசன்,சசிகலாவின் உதவியாளர் கார்த்திக், ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்எல்ஏ பெருமாள் ஆகியோரும் சென்றிருந்தனர்.

    தலைவர் பதவி

    தலைவர் பதவி

    செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், பொதுச்செயலாளராக ஆனதற்கு எனக்கு வாழ்த்து சொன்னார். இனி நமக்கு நல்ல காலம் தான் என்று வாழ்த்தினார். அவருக்காகவே தலைவர் பதவி காலியாக உள்ளது" என்றார்.

    அனுபவம் எப்படி?

    அனுபவம் எப்படி?

    உண்மையிலேயே ஜெயிலுக்குள் இவர்கள் என்னதான் பேசி கொண்டார்கள்? தேர்தல் அனுபவம் எப்படி இருந்தது? மக்கள் அமமுக பற்றி என்ன நினைக்கிறார்கள்? தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? நமக்கு சாதமாக இருக்குமா? என்றெல்லாம் தினகரனிடம் கேட்டதாக தெரிகிறது.

    விசாரிப்பு

    விசாரிப்பு

    குறிப்பாக பாஜகவின் செல்வாக்கு குறித்து நிறையவே விசாரித்திருக்கிறார் சசிகலா. ஏனெனில் சசிகலா, தினகரன் என இவர்களை யாரை பார்த்தாலும் மோடிக்கு ஆகாது. இவர்கள் இருவரின் மீதும் வழக்குகள் முடியாமல் போய் கொண்டே இருக்கிறது.

    மன்னார்குடி

    மன்னார்குடி

    திரும்பவும் மோடி வந்தால், மன்னார்குடி கும்பலுக்கு சிக்கல்தான் என்பதாலோ என்னவோ சசிகலா இப்படி கேட்டிருக்கலாம். அல்லது திமுக-காங்கிரசுடன் ஏதாவது டீலிங் இருக்குமோ என்றும் தெரியவில்லை. ஆனால் இதற்கு தினகரன், பாஜகவுக்கு பாதகமான பதிலையே சசிகலாவிடம் தெரிவித்துள்ளதாகவும் இதைக்கேட்டு சசிகலா ஓரளவு நிம்மதியானதாகவும் தெரிகிறது.

    செந்தூர் பாண்டியன்

    செந்தூர் பாண்டியன்

    அது மட்டும் இல்லை.. இரட்டை இலை சின்னம் குறித்தும் இருவரும் விவாதித்ததாக தெரிகிறது. ஏனென்றால், இரட்டை இலை சின்னத்தை ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ் தரப்புக்கு ஒதுக்கியதை எதிர்த்து சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்தான் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இதைதவிர அதிமுகவுக்கு உரிமை கோரி வழக்கு தொடுப்பது தொடர்பான பேச்சும் சிறையில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆக மொத்தம், தினகரன் செம ஃபாஸ்ட்டாக வேலையை ஆரம்பித்துள்ளார்!

    English summary
    TTV Dhinakaran met Sasikala in Bangaluru Jail and discussed about double leaf symbol case
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X