சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்படி கூட வழி உள்ளதா? ஸ்லீப்பர் செல்களை களமிறக்கும் டிடிவி தினகரன்.. அமமுக புது வியூகம்!

தமிழகத்தில் அதிமுகவின் ஆட்சியை அகற்றுவதற்காக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புதிய வியூகம் ஒன்றை வகுத்து இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்லீப்பர் செல்களை களமிறக்க இப்படியும் வழி இருக்கா?- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் அதிமுகவின் ஆட்சியை அகற்றுவதற்காக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புதிய வியூகம் ஒன்றை வகுத்து இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

    தமிழகத்தில் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டசபை இடைத்தேர்தல் 18 தொகுதிக்கு நடந்தது. இன்னும் 4 தொகுதிக்கு சட்டசபை இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

    இந்த 22 தொகுதி இடைத்தேர்தல்தான் தமிழகத்தில் ஆட்சியை நிர்ணயிக்க போகிறது. இந்த சட்டசபை இடைத்தேர்தலுக்கு பின் அதிமுக அரசு கவிழ கூட வாய்ப்பு உள்ளது. இதற்காக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முக்கியமான திட்டம் ஒன்றை வைத்து இருப்பதாக செய்திகள் வருகிறது.

    தமிழகத்தில் மறுவாக்குப் பதிவு நடைபெறும் வாக்குச் சாவடிகள் இவைதான்.. வெளியிட்டது தேர்தல் ஆணையம்தமிழகத்தில் மறுவாக்குப் பதிவு நடைபெறும் வாக்குச் சாவடிகள் இவைதான்.. வெளியிட்டது தேர்தல் ஆணையம்

    காரணம் என்ன

    காரணம் என்ன

    டிடிவி தினகரனின் திட்டத்தை தெரிந்து கொள்ளும் முன் தமிழக சட்டசபையின் தற்போதைய பலத்தை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழக சட்டசபையில் 22 இடங்கள் காலியாக உள்ளது. அதிமுகவிடம் 114 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். திமுகவிடம் 96 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். மேலும் சுயேச்சை எம்எல்ஏ டிடிவி தினகரன் இருக்கிறார். இது இல்லாமல் இரட்டை இலையில் போட்டியிட்ட தமீமுன் அன்சாரி இருக்கிறார்.

     பெரும்பான்மை பெற எத்தனை

    பெரும்பான்மை பெற எத்தனை

    தமிழக சட்டசபையில் பெரும்பான்மை பெற 118 இடங்கள் தேவை. இதனால் அதிமுக 4 இடங்களை வென்றால் பெரும்பான்மை பெற முடியும். ஆனால் அதிமுகவில், அறந்தாங்கி தொகுதியின், ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் தொகுதியின், கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி தொகுதியின் பிரபு ஆகியோர் அதிர்ச்சி எம்எல்ஏக்கள் ஆவர். இதனால் அதிமுக பெரும்பான்மை பெற குறைந்தது 7-8 இடங்கள் தேவை.

    இரண்டு லாக்

    இரண்டு லாக்

    இதனால்தான் அதிமுக இந்த மூன்று எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய நினைத்தது. ஒருவேளை அதிமுக மூன்று எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தால், அதன் பலம் 111 ஆக குறையும். இடைத்தேர்தலுக்கு பின் மொத்த சட்டசபை பலம் 231 ஆக குறையும் (3 பேர் தகுதி நீக்கம் போக). அப்போதும் கூட அதிமுக ஆட்சி அமைக்க 116 எம்எல்ஏக்கள்தேவை. இதனால் அதிமுக குறைந்தது 4-5 இடங்களை கண்டிப்பாக வெல்ல வேண்டி இருக்கும்.

    திமுக அமமுக

    திமுக அமமுக

    இங்கதான் திமுக அதிமுகவை லாக் செய்தது. சபாநாயகருக்கு எதிராக திமுக தற்போது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதன் மீதான வழக்கு முடியும் வரை, சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடக்கும் வரை சபாநாயகர் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது.

    அமமுக உதவி

    அமமுக உதவி

    இதில் திமுகவிற்கு அமமுக உதவ போவதாகவும் அறிவித்து இருக்கிறது. அதாவது சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் அமமுக திமுகவிற்கு ஆதரவு அளிக்கும். இதனால் சபாநாயகர் நீக்கப்பட வாய்ப்புள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் அதிமுக அரசு கவிழ கூட வாய்ப்புள்ளது.

    தினகரன் பிளான்

    தினகரன் பிளான்

    ஆனால் அதிமுக 4-5 இடங்களை பெற்று பெரும்பான்மைக்கு நெருக்கமாக வந்தால், டிடிவி தினகரன் தனது ஸ்லீப்பர் செல்களை களமிறக்குவார் என்று கூறுகிறார்கள். அதிமுகவில் இருக்கும் சில எம்எல்ஏக்கள், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில், சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அப்படி நடந்தால் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் என்கிறார்கள்.

    அவர்கள் வருகிறார்கள்

    அவர்கள் வருகிறார்கள்

    தினகரன் பல நாட்களாக சொல்லிக்கொண்டு இருந்த அந்த ஸ்லீப்பர் செல்கள், இப்போதுதான் விழித்துக் கொள்வார்கள். இவர்கள் சபாநாயகற்கு எதிராக வாக்களிப்பார்கள். இல்லையென்றால் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து மொத்தமாக ஆட்சியை கவிழ்ப்பார்கள். மே 23ல் அதிமுக எத்தனை இடங்களை வெல்கிறது என்பதை பொறுத்தே இதெல்லாம் நடக்கும், என்கிறார்கள்.

    English summary
    AMMK Gen Sec TTV Dinakaran's final plan against AIADMK government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X