சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு.. கையாலாகாத அரசு.. டிடிவி தினகரன் கடும் விமர்சனம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு சட்டம் இயற்றிய நிலையில் ஆளுநர் ஒப்புதல் கொடுக்கும் வரை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறாது என்று கூறி பொறுப்பைத் தட்டி கழிக்கும் கையாலாகாத ஓர் அரசாங்கம் தமிழ்நாட்டில் இருப்பது வேதனை அளிக்கிறது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

செப்டம்ர் 15ம் தேதி தமிழக அமைச்சரவை நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு சட்டம் இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால், இன்று வரை ஆளுநர் ஒப்புதல் தரவில்லை.

TTV Dinakaran says about 7.5 percentage inter reservation

எனவே, நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 7.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களை பழனிசாமி அரசு மீண்டும் ஒருமுறை நம்பவைத்து ஏமாற்றுகிறதோ என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

ஏற்கனவே நீட் தேர்வு சட்ட மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்ததை மூடிமறைத்து ஏமாற்றிய இந்த ஆட்சியாளர்கள், ஏழை,எளிய மாணவர்களுக்கு அதே போன்றதொரு துரோகத்தை இப்போதும் செய்வது கண்டிக்கத்தக்கது.

விடுதலைக்கு சசிகலா ஆயத்தம்.. அபராதம் செலுத்த வக்கீலுக்கு அதிரடி கடிதம்! தமிழக மக்கள் பற்றி உருக்கம் விடுதலைக்கு சசிகலா ஆயத்தம்.. அபராதம் செலுத்த வக்கீலுக்கு அதிரடி கடிதம்! தமிழக மக்கள் பற்றி உருக்கம்

ஆளுநர் ஒப்புதல் கொடுக்கும் வரை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறாது என்று கூறி பொறுப்பைத் தட்டி கழிக்கும் கையாலாகாத ஓர் அரசாங்கம் தமிழ்நாட்டில் இருப்பது வேதனை அளிக்கிறது என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

English summary
TTV Dinakaran condemns Tamilnadu Government for not giving inter reservation for Tamilnadu students in medical seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X