சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாஸ்து சரியில்லை.. ஒரே குழப்பம்.. இடைத் தேர்தலிலும் போட்டியில்லை.. தினகரன் திடுக் முடிவு

Google Oneindia Tamil News

சென்னை: வேலூரில் போட்டியிட போவதில்லை என்று டிடிவி தினகரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இப்போது நடைபெற உள்ள இடைத்தேர்தல்களிலும் அமமுக போட்டியிடாது என்று தினகரன் அறிவித்துள்ளது அமமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியையும், அதிமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

அமமுக தற்போது கடுமையான குழப்பத்தில் பயணித்து வருகிறது. சசிகலாவை நேரில் பார்த்து பேசி நிர்வாகிகளை மாற்றி அமைத்தாலும், இன்னும் பழைய வேகத்தை அமமுகவால் எட்ட முடியவில்லை.

சில தினங்களுக்கு முன்பு வேலூர் தொகுதியில் அமமுக போட்டியிடாது என்று சொல்லி இருந்தார். இதற்கு தேர்தல் கமி‌ஷனில் பதிவு செய்யும் வேலையில் தீவிரமாக இருக்கிறோம், அதனால்தான் போட்டியிடவில்லை என்று சொன்னார்.

எதுவும் பேசப்படாது.. தமிழ்மகன் உசேனுக்கு வாய்ப்பூட்டு.. கட்சியில் இருந்து ஒதுங்குகிறாரா உசேன்? எதுவும் பேசப்படாது.. தமிழ்மகன் உசேனுக்கு வாய்ப்பூட்டு.. கட்சியில் இருந்து ஒதுங்குகிறாரா உசேன்?

நாங்குநேரி

நாங்குநேரி

இந்நிலையில், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். ஏனென்றால், தேர்தலில் போட்டியிட்டால் 3 தொகுதிகளுக்கும் 3 சின்னம் வழங்குவார்கள் என்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், கட்சியை பதிவு செய்த பிறகு ஒரே சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் வழங்கும் போது தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம் என்றும் தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

அதிர்ச்சி தகவல்

அதிர்ச்சி தகவல்

இன்று வேலூர் தொகுதியின் அமமுகவின் முக்கிய பிரமுகர் திமுகவில் இணைந்த நிலையில், பாப்பிரெட்டிபட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, இப்படி ஒரு அதிர்ச்சி தகவலை தினகரன் தெரிவித்துள்ளது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் தேர்தலில் போட்டியிடாததற்கு வேறு இரு காரணங்களும் சொல்லப்படுகின்றன.

பழனியப்பன்

பழனியப்பன்

ஒன்று, தான் தங்கியிருக்கும் அடையாறு வீட்டின் வாஸ்து சரியில்லை என்று தினகரன் நினைக்கிறாராம். மற்றொன்று, பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன் திமுக பக்கம் போக போவதாகவும் தகவல்கள் பரவிக்கிட்டே இருக்கிறதாம்.

அதிமுக

அதிமுக

இது தினகரனை கடுமையாக அப்செட் ஆக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதனால்தான் தேர்தலில் போட்டியில்லை என்றும் சொல்கிறார்கள். இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் அமமுக போட்டியிடாமல் இப்படி ஒதுங்கி ஒதுங்கி போவது அதிமுகவுக்குத்தான் நேரடியான லாபமாக அமைந்துள்ளது!

English summary
AMMK General Secretary TTV Dinakaran has announced that "We will not contest in Assembly election"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X