சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மணல் அள்ளுவதில் திமுகவும், அதிமுகவும் கூட்டணி... டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

சென்னை: மணல் அள்ளுவதில் திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நீர்நிலைகளைத் தூர்வாரி சீரமைப்பதற்காக தமிழக அரசு ரூ.500 கோடியை ஒதுக்கியுள்ள நிலையில், பணிகள் வெளிப்படையாக நடைபெறவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சிபிசிஐடி இயக்குநர் ஜாபர் சேட் அதிரடி பணியிடமாற்றம்.. டிஎன்பிஎஸ்இ முறைகேடு வழக்கை விசாரித்தவர் சிபிசிஐடி இயக்குநர் ஜாபர் சேட் அதிரடி பணியிடமாற்றம்.. டிஎன்பிஎஸ்இ முறைகேடு வழக்கை விசாரித்தவர்

மேட்டூர் அணை

மேட்டூர் அணை

கடந்த இரண்டாண்டுகளைப் போல இந்தாண்டும் தண்ணீர் வரும் கடைசி நேரத்தில் ஏனோ, தானோவென்று அரைகுறையாக தூர்வாரினால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் காவிரி டெல்டாவின் கடைமடை பாசனப் பகுதிகள் வரை முழுமையாக சென்றடையாது என்று விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தினகரன் குற்றச்சாட்டு

தினகரன் குற்றச்சாட்டு

நிலைமை இப்படியிருக்க, ஊருக்கு ஊர் ஆளுங்கட்சியினரும், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. வினரும் கூட்டணி அமைத்துக்கொண்டு சட்ட விரோத மணல் கொள்ளையில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆட்சியாளர்கள் இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் கொரோனா கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதால் அனைத்து விவசாயிகளுக்கும் சாகுபடிக்கான உரம் உள்ளிட்ட இடுபொருட்களைக் குறைந்தபட்சம் 50% மானியத்தில் வழங்க வேண்டும்.

12 மணி நேரம்

12 மணி நேரம்

தொடர்ந்து சாகுபடி பணிகளைச் செய்வதற்கு பெருமளவு பம்ப்செட் பாசனத்தையும் நம்பியிருப்பதால் விவசாயத்திற்காக வழங்கப்படும் மும்முனை மின்சாரத்தை (3 Phase) நாள்தோறும் குறைந்தபட்சம் 12 மணி நேரம் தடையின்றி வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இதே போன்று விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சிறப்புக் கடன் உதவிகளை வங்கிகள் மறுப்பேதும் சொல்லாமல் வழங்குகின்றனவா என்பதையும் அரசு கண்காணிக்க வேண்டும்.

முன்னுரிமை

முன்னுரிமை

விவசாயம் மற்றும் விவசாயப்பணிகள் தொடர்பாக வரும் முறையீடுகளை முன்னுரிமை கொடுத்து கவனித்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

English summary
ttv dinakaran says, dmk and admk alliance in sand theft
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X