சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உள்ளாட்சித் தேர்தலை நடத்தியிருந்தால் இத்தகைய சேதத்தை தடுத்திருக்கலாம் - தினகரன்

Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் நடத்தியிருந்தால் இத்தகைய சேதத்தை தடுத்திருக்கலாம் என்று டிடிவி தினகரன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

TTV Dinakaran says that Civic polls would have conducted

கஜா புயல் கரையை கடந்த போது 110 கி.மீ. வேகத்துக்கு காற்று பலமாக வீசியது. மிக கனமழை பெய்தது. இதனால் 7 மாவட்டங்களில் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. இதனால் வாழை, தென்னை, நெல் உள்ளிட்ட பயிர்கள் நாசமாகின.

இங்கு ஏராளமான மரங்கள் விழுந்தன. மின் கம்பங்களும் சாய்ந்தன. இதனால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் மக்கள் இன்னல்படும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் உள்ளாட்சி தேர்தல் உரிய நேரத்தில் நடந்திருந்தால், உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களோடு சேர்ந்து புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டிருப்பார்கள். அதன்மூலம், மக்கள் இவ்வளவு பெரிய பாதிப்புக்கு உள்ளாகாமல் காத்திருக்கலாம்! என்று தெரிவித்துள்ளார்.

English summary
TTV Dinakaran says that Civic polls would have been conducted on appropriate time. If it was conducted we can decrease the damage of Gaja cyclone by preventitative measures.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X