சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

துரோகிகளுடன் சேருவதை விட கடலில் குதிப்பது எவ்வளவோ மேல்.. டிடிவி தினகரன் கொந்தளிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: துரோகிகளுடன் இணைவதை விட கடலில் குதிப்பது எவ்வளவோ பரவாயில்லை என டிடிவி தினகரன் கொந்தளித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக தனித்து போட்டியிடுகிறது. மொத்தம் 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் இக்கட்சி போட்டியிடுகிறது. மீதமுள்ள ஒரு தொகுதி கூட்டணி கட்சியாந எஸ்டிபிஐ-க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

டிடிவி தினகரன் மத்திய சென்னை தொகுதியில் பிரசாரம் செய்தார். அவர் மண்ணடியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசுகையில் வரும் 25-ஆம் தேதி குக்கர் சின்னம் வழங்க கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் வருகிறது.

கோவையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் கலந்துரையாடல் நிகழ்ச்சியை பாதியில் நிறுத்திய அதிகாரிகள் கோவையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் கலந்துரையாடல் நிகழ்ச்சியை பாதியில் நிறுத்திய அதிகாரிகள்

பயில்வான் கூட்டணி

பயில்வான் கூட்டணி

இதனால் 26-ஆம் தேதிக்கு பிறகுதான் அமமுக வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்வர். இன்று நாளிதழ்கள், தொலைகாட்சிகளில் பார்த்தால் ஒன்று மெகா கூட்டணி என்கிறார்கள், மற்றொன்றை பயில்வான் கூட்டணி என்கிறார்கள்.

தேர்தல் முடிவுகள்

தேர்தல் முடிவுகள்

உண்மையில் நாம் அமைத்திருக்கும் கூட்டணிதான் இயற்கையாக எந்த ஒரு பேரமும் இல்லாமல் பாசத்துடன் அரசியலைத்தாண்டி தமிழக மக்களின் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டணியாகும். இத்தனை நாள்கள் கூட்டணி அமைத்தவர்களின் முடிவுகள் தேர்தல் முடிவுகளுக்கு பிறகுதான் தெரியும்.

[குமரியில் களமிறங்கும் வசந்தகுமார் எம்எல்ஏ.. அசரவைக்கும் அரசியல் பயோடேட்டா இதுதான்! ]

முடிவுக்கு

முடிவுக்கு

ஆனால் இந்த கூட்டணிகள் தேர்தல் முடிவுகளுக்கு முன்பாகவே தோல்வி அடையும் என்பது தெரிந்துவிட்டது. ஆர் கே நகர் முடிவுதான் இவர்களுக்கு வரும். நடைபெறவுள்ள 18 தொகுதி இடைத்தேர்தலில் இவர்களால் 8 தொகுதிகளில் வெற்றி பெற முடியவில்லை எனில் இந்த ஆட்சி தன்னால் முடிவுக்கு வந்துவிடும்.

கடலில் குதிக்கலாம்

கடலில் குதிக்கலாம்

துரோகிகளுடன் சேருவதை விட கடலில் குதிக்கலாம். இவர்கள் எங்களுக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை. பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்துவிட்டனர். இதனால் அவர்களுடன் சேர வாய்ப்பே இல்லை.

சமரசம் இல்லை

சமரசம் இல்லை

33 ஆண்டுகள் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள். என்றைக்கும் எவரிடமும், யாரிடமும் சமரசம் என்ற வார்த்தைக்கு எங்கள் அகராதியில் இடமில்லை என்றார் தினகரன்.

English summary
TTV Dinakaran says that we could not join with ADMK at any circumstances. Instead we can fell into the sea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X