சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீயும் வேண்டாம்.. அட நீயும் வேணாம்.. தனி ரூட்டை பிடிக்கும் தினகரன்.. என்ன செய்ய போகிறார்?

மு.க.ஸ்டாலினை சிறுபிள்ளைதனம் என தினகரன் விமர்சித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் 3-வது கூட்டணியை உருவாக்கும் தினகரன்- வீடியோ

    சென்னை: இனி டிடிவி தினகரன் என்ன செய்ய போகிறார் என்பது ஓரளவு விளங்கி விட்டது.

    கூடிய சீக்கிரம் எலக்‌ஷன் வரப்போகுது. இதற்காக எல்லா கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. கூட்டணி தொடர்பான விஷயங்களையும் கையில் எடுத்து வருகின்றன.

    இதில் கடந்த சில தினங்களாகவே அதிக சர்ச்சைக்கு உள்ளானது அமமுகதான். கட்சிதாவல், சசிகலாவை ஜெயிலில் சந்தித்தது, ஓ.ராஜா விவகாரம் என சூடு பறந்துகொண்டிருக்கிறது.

    ஓ.ராஜா டிஸ்மிஸ்

    ஓ.ராஜா டிஸ்மிஸ்

    இந்த சமாச்சாரங்களால் அமமுக கொஞ்சம் ஆடித்தான் போனது. செந்தில் பாலாஜி கட்சி தாவலுக்கு பிறகு வீழ்ந்து விடும், அமமுக அடியோடு காணாமல் போய்விடும் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் ஓ.ராஜா டிஸ்மிஸ் விவகாரத்திற்கு பிறகு தெம்புடன் உள்ளார் தினகரன்.

    திமுகதான் காரணம்

    திமுகதான் காரணம்

    ஏற்கனவே அமமுக-திமுக ரகசிய கூட்டு என்று அதிமுக தரப்பினர் சொல்லி கொண்டே இருந்தார்கள். ஆனால் நேற்று தினகரன் அளித்த பேட்டி அதனை உடைத்தெறிந்துள்ளது. "பாஜகவுக்கு உதவி செய்யும் நோக்கில், ராகுலை ஸ்டாலின் முன்மொழிந்தாரோ என தெரியவில்லை. போன தேர்தலில் காங்கிரஸ் டெபாசிட் இழக்கக்காரணமே திமுகதான்" என்றார்.

    இரண்டும் இல்லை

    இரண்டும் இல்லை

    "என் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம், இப்போது ஆளும் கட்சியில் சேருவது என்பது தற்கொலை செய்வது போல" என்றார். அப்படியானால் வரப்போகிற தேர்தலில் திமுக, அதிமுக இரண்டிலும் அமமுக சேராது என்பது தெளிவாக தெரிந்துவிட்டது.

    கூட்டணி அமைப்பேன்

    கூட்டணி அமைப்பேன்

    அப்படியானால் தினகரன் இனி என்ன செய்ய போகிறார்? அதற்கும் பதிலை நேற்று சூசகமாக சொன்னார், "தமிழக நலனை பாதுகாக்க, இங்குள்ள மாநிலகட்சிகள் வலுவானால்தான்முடியும். ஒரு சில மாநில கட்சிகளோடு பேசிக்கொண்டிருக்கிறேன். கூட்டணி அமைப்பேன்" என்று சொன்னார்.

    பாஜகவுக்கு மாற்று?

    பாஜகவுக்கு மாற்று?

    அதாவது, 3வது அணி உருவாகும் சூழலும் ஏற்பட்டுள்ளதாக தினகரன் கூறுகிறார். 3-வது அணி அமைக்கும் நிலை ஏற்பட்டால், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இடம் கிடைக்காதவர்கள் தினகரனின் தலைமையில் ஏற்படும் புதிய கூட்டணிக்கு வர வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளார். பாஜகவிற்கு எதிராக வலுவான அணி உருவாகக் கூடாது என்று ஸ்டாலின் முயற்சிக்கிறார் பாஜகவுடன் தினகரன் சேர மாட்டார் என்றே தெரிகிறது.

    தேமுதிக வீழ்ந்தது

    தேமுதிக வீழ்ந்தது

    மீதமிருப்பது பாமக, தேமுதிக, விசிக, மதிமுக போன்றவைதான். விசிகவும், மதிமுகவும் திமுக கூட்டணியில் இருக்கிறார்களா, இல்லையா என்றே இன்னமும் தெரியவில்லை. அதேபோல, "அரசியலில் தவறான முடிவெடுக்கும் கட்சிகள் வீழ்ச்சியை சந்திக்கும். தேமுதிக அப்படிதான் வீழ்ந்தது" என்று சொல்லி அந்த கட்சியையும் சந்தடி சாக்கில் வாரிவிட்டார் தினகரன்.

    தயார் ஆகிறது

    தயார் ஆகிறது

    எனவே எந்தெந்த கட்சிகள் தினகரனுடன் கை கோர்க்கும் என்று உறுதியாக இப்போதைக்கு தெரியாவிட்டாலும், 3-வது அணி தினகரன் தலைமையில் விறுவிறுப்பாக ரெடி ஆகிறது என்பது மட்டும் தெரிகிறது

    English summary
    AMMK TTV Dinakaran trying to setup 3rd team against ADMK and DMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X