சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. திமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு

Google Oneindia Tamil News

Recommended Video

    TTV Dinakaran: அமமுகவிலிருந்து தங்கதமிழ்ச் செல்வன் விரைவில் நீக்கப்படுகிறார்: டிடிவி- வீடியோ

    சென்னை: சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலுக்கு எதிராக திமுக கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் வரும் ஜுலை 1ம் தேதி எடுத்து கொள்ளப்படுகிறது. இந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்போவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

    சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28ம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 23 நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தொடரில் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் குறித்து விவாதம் நடக்க உள்ளது. எதிர்க்கட்சி மற்றும ஆளும் கட்சி உறுப்பினர்கள் துறை சார்ந்து கேட்கும் கேள்விகளுக்கு உறுப்பினர்கள் பதில் அளிப்பார்கள்.

    ttv dinakaran support no Confidence motion against assembly speaker dhanapal

    இந்நிலையில் சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலுக்கு எதிராக திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது இந்த தீர்மானம் வரும் ஜுலை 1ம் தேதி பேரவையில் எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதிமுகவுக்கு 123 உறுப்பினர்களும், திமுக மற்றும் அதன் கூட்டணிக்கு 107 உறுப்பினர்கள் ஆதரவும் உள்ளது. இந்நிலையில் தங்கதமிழசெல்வன் உடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இன்று டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை திமுக கொண்டுவந்துள்ளது. இதனை நீங்கள் ஆதரிப்பீர்களா என்று கேட்டனர்

    இதற்கு பதில் அளித்த தினகரன் எங்கள் கட்சி 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் தனபாலுக்கு எதிராக வாக்களிப்பேன் என்றார். இதனால் திமுக சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரவுள்ள தீர்மானத்தை டி.டி.வி தினகரன் ஆதரிக்கப்போவது உறுதியாகி உள்ளது.

    English summary
    ammk general secretary ttv dinakaran support dmk's no Confidence motion against assembly speaker dhanapal on july 1st
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X