சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது தொடக்கம்தான்.. பாரத் நெட் டெண்டர் ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது.. டிடிவி தினகரன் டிவிட்!

Google Oneindia Tamil News

சென்னை: பாரத் நெட் டெண்டரில் விதிமீறல் இருப்பது உறுதிசெய்யப்பட்டதால் மத்திய அரசு அந்த டெண்டரை ரத்து செய்துள்ளது, மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிவேக இன்டர்நெட் வசதியை ஏற்படுத்த பாரத் நெட் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. ரூ.1,950 கோடியில் இந்த திட்டத்திற்கு தமிழக அரசு மோளம் டெண்டர் விடப்பட்டது. 12, 524 கிராமங்களில் இதன் மூலம் இணைய வசதி ஏற்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.

TTV Dinakaran welcomes the decision to cancel the Bharat Net Tender

இந்த நிலையில் டெண்டர் விடப்பட்டதில் விதிகள் மீறப்பட்டதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டி உள்ளது. அதோடு இந்த டெண்டரில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது என்று கூறி மொத்தமாக டெண்டர் மத்திய அரசு மூலம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அவர் தனது டிவிட்டில், தமிழகத்தில் கிராம ஊராட்சிகளை இண்டர்நெட் மூலம் இணைப்பதற்காக ரூ.1,950 கோடிக்கு பழனிசாமி அரசு வெளியிட்டிருந்த பாரத் நெட் டெண்டரில் விதிமீறல் இருப்பது உறுதிசெய்யப்பட்டதால் மத்திய அரசு அந்த டெண்டரை ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களுக்காக இந்த டெண்டர் விதிமுறைகளை பழனிசாமி அரசு சட்ட விரோதமான முறையில் மாற்றியதாக பல்வேறு தரப்பினரும் எழுப்பிய குற்றச்சாட்டுகள் இதன் மூலம் உண்மையாகியிருக்கின்றன.

இது ஆரம்பம்தான்..! துறைகள் தோறும் பங்காளிகள், சம்பந்திகள் எனச் சுற்றத்திற்காக இஷ்டம் போல வாரி வழங்கப்பட்ட டெண்டர்களில் உள்ள முறைகேடுகள் இனி ஒவ்வொன்றாக வெளியில் வரும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது, என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டு இருக்கிறார்.

Recommended Video

    அமுமுக, அதிமுக இணைப்பு- சசிகலா விடுதலை... திமுகவுக்கு வைக்க போகும் செக்

    நல்லாதானே பேசினார்கள், இப்போ ஏன் எதிரியானார்கள்.. மோடி உண்மை பேசவேண்டும்.. ராஜஸ்தான் முதல்வர் சுளீர்நல்லாதானே பேசினார்கள், இப்போ ஏன் எதிரியானார்கள்.. மோடி உண்மை பேசவேண்டும்.. ராஜஸ்தான் முதல்வர் சுளீர்

    English summary
    TTV Dinakaran welcomes Central Govt's the decision to cancel the Bharat Net Tender.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X