சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தலைதெறிக்க ஓடும் அமமுக நிர்வாகிகள்.. 'இது தான் நிதர்சன உண்மை'..இன்று புரிந்திருக்கும் தினகரனுக்கு

Google Oneindia Tamil News

Recommended Video

    அமமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி.. இசக்கி சுப்பையாவும் விலகல்

    சென்னை: டிடிவி தினகரனை நாடி வந்த அதிமுக நிர்வாகிகள் பலர் ஒவ்வொருவராக கழன்று அதிமுக மற்றும் திமுகவில் இணைந்து வருகிறார்கள். , டிடிவி தினகரன் என்பவரை நம்பி அரசியலில் பெரிதாக சாதிக்கலாம் என்று வந்த நிர்வாகிகள், தேர்தலில தோற்றதால் இன்று கிடைக்கும் படகுகளில் ஏறி தப்பித்து அரசியலில் கரை தேட வழிதேடி வருகிறார்கள்.

    சசிகலா சிறை சென்ற நாளில் திடீரென முதல்வரான எடப்பாடி பழனிச்சாமியும், திடீரென அன்றைக்கு அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக சசிகலாவால் அறிவிக்கப்பட்ட தினகரனும் பின்னாளில் இரு எதிர் துருவங்களாக மாறி சண்டை போடுவார்கள் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

    ஏனெனில் சசிகலா குடும்பத்தை எதிர்த்து தர்ம யுத்தம் தொடங்கிய ஒ பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்த்துக் கொண்டதால் டிடிவி தினகரன் கோபம் அடைந்தார். தனது அத்தை சசிகலாவால் முதல்வரான எடப்பாடி தங்கள் பேச்சை கேட்டு நடப்பார் என எதிர்பார்த்த தினகரனுக்கு கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    யார் மகனாக இருந்தால் எனக்கென்ன.. தூக்கி வெளியே போட வேண்டும்.. ஆவேசமான மோடியார் மகனாக இருந்தால் எனக்கென்ன.. தூக்கி வெளியே போட வேண்டும்.. ஆவேசமான மோடி

    ஒதுக்கப்பட்ட டிடிவி

    ஒதுக்கப்பட்ட டிடிவி

    இதனால் கோபம் அடைந்த தினகரன் அதிமுகவில் தனக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்களுடன் இணைந்து தனித்து செயல்பட்டார். அவர்களை வைத்து எடப்பாடிக்கு எதிராக ஆளுநரிம் மனு கொடுக்க வைத்தார் . இதனால் ஆத்திரம் அடைந்த எடப்பாடி 18 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய வைத்ததோடு, ஓ பன்னீர்செல்வத்தோடு சேர்ந்து தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு கட்சியை கைபற்றினார்.

    படுதோல்வி அடைந்த அமமுக

    படுதோல்வி அடைந்த அமமுக

    அதன்பின்னர் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கி தினகரன் நடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்தார். இதனால் அவரை நம்பி சென்ற எமஎல்ஏக்கள் யாருமே மீண்டும் எம்எல்ஏ ஆக முடியவில்லை. இடைத்தேர்தல் நடப்பதை முதலில் விரும்பாத முதல்வர் எடப்பாடி கடைசியில் சரியான நேரம் பார்த்து லோக்சபா தேர்தலுடன் தேர்தலை சந்தித்ததால் 9 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றினார். ஆனால் தினகரனோ ஒரு இடத்தில் கூட வெல்லாமல் படுதோல்வி அடைந்தார்.

    அதிமுகவில் இணையும்

    அதிமுகவில் இணையும்

    இதன் காரணமாக டிடிவியின் போர்ப்படை தளபதியாக இருந்த தங்கதமிழ்ச்செல்வன் திமுகவில் சேர்ந்து கொண்டார். இதேபோல் மற்றொரு தளபதியான இசக்கி சுப்பையா இப்போது அதிமுகவில் சேரப்போவதாக அறிவித்துள்ளார். இவர்கள் மட்டுமல்ல அமமுகவில் கிளைமட்ட அளவில் இருந்து நிர்வாகிகள் வரை பலரும் தாய்கழகமான அதிமுகவில் இணைந்து வருகிறார்கள்.

    தினகரன் சர்வாதிகாரம்

    தினகரன் சர்வாதிகாரம்

    அமமுகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள் முன் வைக்கும் குற்றச்சாட்டு டிடிவி தினகரன் சர்வாதிகாரமாக செயல்படுகிறார் என்பதே. ஆனால் தினகரனோ, தேர்தலில் தோற்றதால் பதவி மற்றும் பணம் சம்பாதிக்கும் ஆசையில் வேறு கட்சிகளுக்கு இவர்கள் தாவுவதாக கூறினார். இருவரில் யார் சொல்வது உண்யைமாக இருக்கும் என்பது மக்களுக்கே தெரியும்.

    மண் குதிரை தினகரன்

    மண் குதிரை தினகரன்

    ஏனெனில் விலகிய நிர்வாகிகள் அனைவரும் அதிமுக பலவீனாமாக இருப்பதாக எண்ணி, டிடிவி தினகரன் என்பவரை நம்பி அரசியலில் பெரிதாக சாதிக்கலாம் என்று வந்தார்கள். ஆனால் ஒருகட்டத்தில் தினகரன் ஜெயிக்கும் குதிரையாக இல்லை, மண் குதிரை என்று நினைத்து தூக்கிப்போட்டுவிட்டு இப்போது ஓடுகிறார்கள் என்பதே உண்மை என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.அரசியலில் நீண்ட அனுபம் உள்ள அமமுக நிர்வாகிகள்.. ஆழம் தெரியாமல் காலைவிட்டுவிட்டு இப்போது மூழ்கி விட்டோம் என எண்ணி கிடைத்த படகுகளில் ஏறி தப்பித்து வருகிறார்கள் என்பதே நிதர்சன உண்மை

    English summary
    ammk general secretary ttv dinakaran Would have understand why ammk leaders join other party after eletion defeat
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X