• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

திடீர்னு கதறிய சசிகலா.. மிரண்டு போன உறவுகள்.. "தாயீ.. நீ நினைச்சது நடக்கும்".. சிலர்த்து போன தஞ்சை

|

சென்னை: கடந்த 2 நாட்களாகவே சசிகலாவின் தஞ்சாவூர் பயணம்தான் பரபரப்பாக அரசியல் களத்தில் பேசப்பட்டு வருகிறது.. இதற்கு என்ன காரணம்? பின்னணியில் என்ன நடக்கிறது?

  சசிகலாவின் ஆன்மீக பயணத்தின் புன்புலம் என்ன? அரசியல் விமர்சகர்கள் கருத்து...!

  ரஜினியை போலவே அரசியலுக்கு வராமலேயே ஒதுங்கிவிட்டார் சசிகலா.. "விலகல்" என்று சொல்லிதான் அறிக்கையை விடுத்தாரே தவிர, "முழுக்கு" என்று சொல்லவில்லை..

  செம்ம டேலண்ட்.. 8ம் வகுப்பு வரை படித்துள்ள குஷ்பு.. சொத்து எவ்வளவு.. வேட்புமனுவில் ஆச்சர்ய தகவல் செம்ம டேலண்ட்.. 8ம் வகுப்பு வரை படித்துள்ள குஷ்பு.. சொத்து எவ்வளவு.. வேட்புமனுவில் ஆச்சர்ய தகவல்

  அதனால் சசிகலாவின் அரசியலை யாரும் முடிவுக்கு கொண்டு வர விருப்பம் இல்லை.. எனவேதாதான் அது தொடர்பான யூகங்களும், தகவல்களும், செய்திகளும், அனுமானங்களும் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கின்றன.

   டிடிவி தினகரன்

  டிடிவி தினகரன்

  டிடிவி தினகரன் தன்னை நிரூபிக்கவும், நிலைநிறுத்தி கொள்ளவும், சசிகலாவின் ஆதரவு இல்லாமல் ஒரு பக்கம் தன்னந்தனியாக களம் இறங்கி வரும் நிலையில், சசிகலா திடீரென தஞ்சாவூக்கு கிளம்பி சென்றார்.. இது ஒரு வார பயணம்.. இதற்கு 2, 3 காரணங்களும் சொல்லப்படுகின்றன..

   கிடாவெட்டு

  கிடாவெட்டு

  2 நாட்களுக்கு முன்பு, கணவர் நடராஜனின் தம்பி பழனிவேலின் பேரக்குழந்தைகளுக்கு காதணி விழா நடந்தது.. நடராஜனின் விளார் கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோயிலில் நடந்த இந்த விழாவில், கிடாவெட்டு பூஜையும் செய்யப்பட்டது.. இதில் கலந்து கொண்டார் சசிகலா.. சசிகலாவிற்கும், நடராஜனுக்கும் கல்யாணமான புதுசில் இந்த கோயிலுக்கு வந்தார்களாம்..

   குலதெய்வம்

  குலதெய்வம்

  அதோடு இப்போதுதான் வந்தாராம்.. தன் குலதெய்வம் கோயிலில் வழிபாடு நடத்திய சசிகலா அங்கு கண்ணீர் விட்டு அழுததாகவும் தகவல் வெளியாகியுள்ளது... எத்தனையோ பேருக்கு எவ்வளவோ செய்தும், நன்றி இல்லை என்று அவர் சொன்னதாகவும் கலங்கினாராம். இந்த குலதெய்வ கோயிலில் குறி சொல்லும் ஒரு பெரியவர், "தாயீ.. இங்க காலடி பட்டால் எல்லா கஷ்டமும் தீரும்.. இழந்த சக்தி திரும்பவும் கிடைக்கும்.. இனி எல்லாம் நல்லதே நடக்கும்" என்றும் சொல்லவும், சசிகலா முகத்தில் புது தெம்பு வந்ததாம்.

   நடராஜன்

  நடராஜன்

  மேலும் சசிகலா கணவர் நடராஜனின் நினைவு நாள் வருகிற 20ஆம் தேதி வருகிறது. எனவே விளாரில் உள்ள அவரின் சமாதியில் அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருக்கிறார்... அற்கான ஏற்பாடுகளும் தயாராகி வருகிறது.. அதன்பிறகு நெருங்கிய சொந்த பந்தங்களையும் சந்திக்க உள்ளார்.. இதற்கு நடுவில், அரசியல் சம்பந்தப்பட்ட சில உறுதிப்படுத்தப்படாத செய்திகளும் கசிய ஆரம்பித்துள்ளன..

   வேட்பாளர்கள்

  வேட்பாளர்கள்

  தஞ்சாவூர் சென்ற சசிகலாவை அமமுக வேட்பாளார்கள், நிர்வாகிகள் பலரும் சந்தித்ததாக தெரிகிறது.. டெல்டா மாவட்டங்களில் சசிகலாவுக்கு என்று தனி செல்வாக்கு இருக்கிறது...சசிகலாவை நேரில் சென்று சந்தித்து ஆதரவு கோரினால், நிச்சயம் தங்களின் வாக்குகள் பன்மடங்கு பெருகும் என்று அமமுக சார்பான டெல்டா விவசாயிகள் நம்புகிறார்கள்.. அதனாலேயே சசிகலாவை சந்திக்க முயன்று வருவதாகவும், இதில், ஒரத்தநாடு வேட்பாளர் மா.சேகர் உட்பட சிலர் ஏற்கனவே சசிகலாவை சந்தித்து ஆதரவு கேட்டதாகவும் சொல்கிறார்கள்.

   முதல்வர் எடப்பாடியார்

  முதல்வர் எடப்பாடியார்

  எனினும், சசிகலாவின் தஞ்சை விஜயத்தை, அதிமுக தரப்பில் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.. கண்காணியுங்கள் என்று வைத்திலிங்கத்துக்கும், உளவுத்துறைக்கும் முதல்வர் மறைமுக உத்தரவிட்டதாகவும், அதனடிப்படையில் சசிகலாவின் நகர்வுகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் பரபரக்கின்றன..!

   
   
   
  English summary
  TTV Dinakarans AMMK Candidates met with Sasikalas in Tanjore, sources say
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X